காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்.

2

நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியே ற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற் சி செய்யக்கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்தால் அது கேட்கும் திறனை பாதிக்கும்.

காதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல். ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச்சுத்த ம் செய்து கொள்ளலாம். காதுவலி, காதடைப்பு, போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும்.

தேவைப்பட்டால் மெல்லி ய பருத்து துணிமூலம் சுத்தப்படுத்தலாம். காது குத்தும்போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டா ல் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும்.

தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரி டம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோசம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாகசிந்த கூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்ப தும் ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள். தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் பாட்டுக் கேட்பதையும் தவிர்க்கவும்.

சிலருக்கு எந்த காரணமும் இன்றி காது கேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம்.இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை கால தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்

Share.

About Author

2 Comments

  1. எனக்கு காதில் ஓட்டை உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் பின்னர் ஆபரேஷன் செய்து விட்டார். ஆனால் காதில் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது. அது எப்பொழுது சரி ஆகும். Pls sollunga

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions