நல்லடக்க அறிவிப்பு

0

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் அனைத்து நல்லறங்களையும் ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து, *ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்* என்ற உயர்ந்த சுவனத்தில் சேர்த்துடவும், அவர்களின் குடும்பத்தினர், உறவுகள் & நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா* என்ற அழகிய பொறுமையை வழங்கிடவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) துஆ செய்கின்றது.

sirajudeen
குவைத் வாழ் மக்கள் அனைவரும் அன்னாரின் நல்லடக்கத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறும்,
உலக மக்கள் அனைவரும்
அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

📱+965 66641434
📞 +965 97872482

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions