உங்களுக்கு கும்கி அருவியைப் (ஜோக் அருவி ) பற்றி தெரியுமா ?

0

கும்கி படத்தில் விக்ரம் பிரபுவும், லட்சுமி மேனனும் ஜோக் அருவியின் மேலிருந்து டூயர் பாடிய பின்னர் இந்த அருவி தமிழர்கள் மத்தியிலும் ஃபேமஸ் ஆகிவிட்டது. கர்நாடக சுற்றுலா தலங்களில் தவிர்க்கமுடியாத ஒரு அடையாளம் ஜோக் அருவி. இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவி; இந்த அருவி, ஷராவதி ஆறானது 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படுகிறது.
jogfalls

ஜோகதா குந்தி என்ற பேரே ஜோக் அருவி என்றானது. கெர்சொப்பா என்ற வட்டாரத்தின் ஒரு பகுதி ஜோக் நீர்வீழ்ச்சி; இதனால் கெர்சொப்பா அருவி என்றும் அழைக்கப்படுகிறது.
jogfalls2

2011’இல் SS Gairsoppa என்ற கப்பலின் ஒரு பகுதி கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றுத் தரவுகளின்படி, கெர்சொப்பா என்ற ஊரின் நினைவாக கப்பலுக்கு பெயர் வந்திருப்பது தெரியவந்தது. SS Gairsoppa ஒரு ஆங்கிலேயே கப்பல்; இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா வந்தது. ஐரலாந்து செல்கையில் 1941’இல் கடலில் மூழ்கியது.

ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் (Roarer) என்ற நான்கு அருவிகளும் சேர்ந்துதான் ஜோக் நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படுகிறது. ராஜாதான் உயரமான அருவி இந்த அருவி ரோரர் அருவியோடு ஒரு கட்டத்தில் இணைகிறது.jogfalls3

ரோரர் என்ற பெயர் காரணம் அது விழும்போது எழும் பிரமாண்ட சத்தம்தான்.

ஜோக் நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சம் அடுக்குகள் இல்லாதது. ஒவ்வொரு அருவியும் செங்குத்தாக விழுவதைப் பார்க்கும் அனுபவம் உச்சகட்ட பரவசம். ஜோக் அருவி மின்சாரத்திற்கு சிறந்த பங்களிப்பை செய்கிறது.

ஜோக் அருவியின் நீர் கெர்சொப்பா வழியாக இடகுஞ்ஜி சென்று கடைசியில் அரேபியக் கடலில் கலக்கிறது.
jogfalls4
ஜோக் அருவியை பலவிதங்களில் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதில் ஒன்று: அருவியின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காண்பது. ஆனால் இது எளிதல்ல 1600 படிகள் நடந்து அருவியின் கீழ்ப்பகுதிக்கு வரவேண்டும். அட்டைகள், வழுக்குப் படிகள் உங்களை பயமுறுத்தும். மீறி வந்தால் ஒரு புது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions