அந்தமானில் ஓர் அற்புதம்!

0

அந்தமானில் ஓர் அற்புதம்!

1947-1

அந்தமானில் சமீபத்தில் அறிமுகமாகி இருக்கும் ஒரு சிலிர்க்கும் அனுபவம் – Semi Submarine ride. அந்தமானின் முக்கிய கவர்ச்சி அங்கே வடக்கு வளைகுடா (North Bay)வில் இருக்கும் பவளப்பாறைகள். ராஸ் தீவுகளில் இருந்து வடக்கு வளைகுடாவிற்கு சின்ன கப்பலில் சென்றால் அங்கிருந்து சின்ன படகில் கரைக்கு கூட்டிச்செல்வார்கள். அந்த சின்ன மோட்டர் படகின் கீழ் பகுதியில் பெரிய கண்ணாடி இருக்கும், பவளப்பாறைகள் பார்க்கலாம். வண்ண மீன்களை பார்க்கலாம்.

அங்கே ஆழ்கடல் நீச்சலும் (Scuba Diving) மற்றும் snorkeling செய்யலாம். ஆனால் நாங்கள் 18 பேர் இருந்தோம் எல்லோரும் கடலில் இறங்க முடியாது. வயதானவர்களும் குட்டிக்குழந்தைகளும் இருந்தார்கள். ஹாவ்லாக் தீவில் இருந்து திரும்பும்போது தான் இந்த semi submarine ride பற்றி தெரிந்தது.

கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பெரிய அறை. அறையில் சன்னல்கள் வலுவான கண்ணாடியால் 5செய்யப்பட்டிருக்கும். நார்த் பேவில் பவளப்பாறைகள் இருக்கும் இடத்திற்கு சென்று கப்பல் ஆழ்கடலில் நிற்கும். கீழே இருக்கும் வண்ண மீன்களையும், கடல் உயிரினங்களையும் இன்னும் அருகே சென்று/அமர்ந்து பார்க்கலாம். கொஞ்சம் அதிக விலை இருந்தாலும் ஒரு முயற்சி செய்யலாம் என மூன்றாம் நாள் காலை கிளம்பினோம். அற்புதமான அனுபவம். கொஞ்சம் மழையும் கொஞ்சம் மந்தமான வானிலையும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பேரனுபவமாக இருந்திருக்கும்.

மழை பெய்ததால் நீர் கொஞ்சம் கலங்கிவிட்டது. ஆனாலும் பெரிய மீன்களையும், வண்ண வண்ண மீன்களையும் தேடித்தேடி பார்த்தது அருமையான அனுபவம். அந்தமான் செல்பவர்கள் நிச்சயம் முயற்சிக்கலாம்.

– உமாநாத் செல்வன்

4

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions