திருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்

4

1kதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்: காலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதிக்காக ஏங்கும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் பகுதியில் போதுமான பஸ்களை இயக்க அரசு நிர்வாகம் முன் வராததால் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து படிக்கும் அவலம் தொடர்கிறது.

திருக்காட்டுப்பள்ளி முதல் கண்டியூர் சாலைவரை பகுதிகளில் உள்ள மைக்கேள்பட்டி, செந்தலை, கருப்பூர், நடுக்காவேரி, திருப்பந்துருத்தி மற்றும் சுற்றியுள்ள கிராம புறங்களிலிருந்தும் மாணவ மாணவியர்கள் மேற்படிப்பு படிக்க போதுமான பள்ளிக்கூட வசதி இல்லாததால், பெரும்பாலான கிராம மாணவர்கள் திருவையாறு அல்லது தஞ்சாவூரையே  நாடவேண்டி உள்ளது. இந்த பகுதிகளில் பஸ்வசதியும் குறைவாக இருப்பதால் அதிகாலையில் கிளம்பி கல்லூரி மற்றும் பள்ளி வரும் மாணவர்கள், மாலையில் பள்ளி முடிந்து ஊருக்கு செல்ல, பஸ்சுக்காக ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையிலும் சில மணி நேரத்திற்கு பின் வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் போட்டி போட்டு மாணவர்களை ஏற்றுகின்றனர். இதனால் கூட்டநெரிசலில் பஸ் கூரைகளில் மாணவர்கள் பயணிக்கும் நிலை தொடர்கிறது.

இதை தடுக்கவேண்டிய கண்டக்டரோ பஸ் கூரைகளில் ஏறி டிக்கெட் போடுகிறார். இது போன்ற பயணத்தால் மாணவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தொடர்கிறது. பல முறை தவறிவிழுந்து உயிரிழக்கும் சம்பவமும் நடந்து உள்ளது. இது மாணவர்களை மனதளவில் பாதிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது போன்ற பிரச்னை களுக்கு இது நாள் வரை தீர்வு இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

இதன் மூலம் பொதுப்பயணிகளும், வேலைபார்க்கும் அரசு ஊழியர்களும், மற்றும் தனியார் கன்பெனி ஊழியர்களும் கூட்ட நெரிசலில் சிக்கியே செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், பயணிகள் பயன்பெறும் வகையிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

திருக்காட்டுபள்ளி டூ கண்டியூர் வழித்தடங்களில் போதுமான பஸ்களை இயக்காததால் மக்கள் படும் பாடுக்கு அளவே இல்லை. இப்பகுதியுல் உள்ள அரசியல் கட்சி சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இது போன்ற நிலைக்கு முடிவு கட்ட முடியும். இல்லையேல் மாணவர்கள் மட்டுமல்ல மக்கள் நிலையும் அந்தோ பரிதாபம்தான்.  இச்செய்தியினை படிக்கும்போதாவது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்

  • அபுதாபியிலிருந்து பூந்தை ஹாஜா.

 

Share.

About Author

4 Comments

  1. சாகுல் ஹமீது on

    இதற்க்கு போக்குவரத்து கலகம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  2. DarulIslamfamily Nooruddin on

    நல்ல செய்தி. இத்தகைய ஆக்கபூர்வ சேவைகள் அதிகமதிகம் நடைபெற வேண்டும்.

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions