குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்

0

5நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும்அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையானஅருவி ஒன்றைக் காண்பது அபூர்வம்.

குற்றாலத்தின் பேரருவியாக இருந்தாலும், அதன் மேல் பகுதியிலுள்ளசெண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைய குற்றாலம்ஆனாலும், இந்த அருவிகள் எதுவும் பெரும் உயரத்தில் இருந்து ஒருதூண் போல தண்ணீரைக் கொட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தவில்லை.

நயாகராவைப் போல அச்சமூட்டும் அளவிற்கோ அல்லது கேரளத்தில்சாலக்குடி ஆற்றின் போக்கிலுள்ள அதிரம் பள்ளி போன்று ஒரு அழகியஇயற்கை சூழலில் உள்ளதோ அல்ல குற்றால அருவிகள்.

ஆயினும் குற்றால அருவியை இவ்வளவு சிறப்புடன் போற்றப்படுவதற்குகாரணம்: அதன் அருவி நீர் உடலிற்கு நன்மை பயப்பது, குற்றாலச்சூழல் மனதிற்கு இதமளிப்பது. இதனால்தான் குற்றாலத்தில் குளித்துஊறியவர்கள் எவரும், வேறு எந்த அருவியிலும் குளிக்க முற்படுவதும்இல்லை, போற்றுவதும் இல்லை.

8

தமிழர் பாரம்பரியத்திலும், வரலாற்றிலும்,இலக்கியத்திலும் போற்றப்படும் பொதிகைமலையைத் தழுவி ஓடிவரும் குற்றாலஅருவி நீர், அதன் வழியிலுள்ள பலமூலிகைச் செடிகளைத் தழுவி ஓடிவருவதால்தான் அதற்கு இந்த தனித்தமகிமை இருப்பதாகக் கூறுகிறார்கள்.குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரைஎவராயினும் குற்றால அருவிகளில்குளித்து குறை கூறியவர் எவருமில்லை!

மழை பொய்த்துப் போகும் காலங்களில் போதுமான அளவிற்குஅருவியில் நீர் கொட்டவில்லையே என்று ஒரு குறைபாடல் தவிர,குற்றால அருவிகளை கொஞ்சாதவர்களை காண்பதரிது.

அப்படியென்ன குற்றால அருவிகளுக்கு சிறப்பு என்று இதற்கு மேலும்கேட்பவர்கள், ஒரு முறை குற்றாலத்திற்குச் சென்று அங்குள்ளஅருவிகளில் குளித்து நீராடிவிட்டு, அன்றோ அல்லது மறுநாளோசெங்கோட்டைக்கு அப்பால் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிசென்றுகேரளத்திலுள்ள பாலாறு அருவியில் குளித்துவிட்டு வாருங்கள், அந்தவேறுபாடு தெரியும்.

செங்கோட்ட கணவாயின் சிறப்பு!
தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையேபெரும் அரணாய் நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில், இருமாநிலங்களுக்கும் இடையே சாலை,இரயில் வழிகளை இரண்டுகணவாய்கள்தான் தருகின்றன. வடக்கேபாலக்காடு கணவாய், தெற்கேசெங்கோட்டை கணவாய்.

50 கி.மீ. தூரமுடைய செங்கோட்டை -புனலூர் கணவாய் பாதையில் பயணம் செய்வதே ஒரு தனிஅனுபவம்தான்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions