கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்

0

மலை வாசஸ்தலம் என்றாலே எல்லாருக்குமே ஜிலுஜிலுன்னு காத்து வீசும் ஜாலியான சுற்றுலாதான் ஞாபகத்துக்கு வரும்.

அதுவும் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டாம். பார்க்கும் இடங்கள் எல்லாமே அவர்களுக்குப் புதிய அனுபவத்தைத்தான் கொடுக்கும். தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகியவை மலைவாசச் சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் போன இடங்கள். இங்கே ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வருவோமா?

1ஊட்டி..

தமிழகத்தில் மலை ரயில் இயக்கப்படும் ஒரே மலை வாசஸ்தலம் இதுதான். மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளின் ஊடாக மலை ரயிலில் பயணிப்பது குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். குகைகள், பிரம்மாண்ட மலைகள், சமவெளிகளைப் பார்த்தபடி பயணிப்பது குழந்தைகளுக்கு அலாதியான அனுபவம்.

ஊட்டியில் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் முதல் இடம், அரசுத் தாவரவியல் பூங்காதான். தாவரவியல் பூங்காவுக்குச் சென்றால் குழந்தைகள் ஜாலியாக உருண்டு புரண்டு விளையாடி மகிழலாம். இங்கு வளர்க்கப்படும் விதவிதமான பூக்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு மகிழ்ச்சியையும் தரும். பலவிதமான பூக்களை இங்கே பார்க்கலாம். ஆயிரக்கணக்கான ரோஜாக்களைக் கொண்ட ரோஜா பூங்காவும் மனதைக் கிறங்கவைக்கும்.

குழந்தைகளைக் குதூகலம் அடைய வைக்கும் இன்னொரு இடம், படகு இல்லம். சுமார் 60 ஏக்கர் பரப்பில் இது அமைந்துள்ளது. இங்கே படகு சவாரி செய்யும்போது குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தமிழகத்தின் உயர்ந்த மலைச் சிகரம் தொட்டபெட்டா என்று பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். அதுவும் இங்கேதான் உள்ளது. இங்கே அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கலாம்.

உதகையில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுமலைப் புலிகள் காப்பகம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், இங்குதான் காட்டு விலங்குகளைப் பார்க்க முடியும். இங்கு இயக்கப்படும் சிறப்பு வாகனங்களின் மூலம் வனப் பகுதிகளுக்குச் செல்லலாம். அப்படிப் போகும்போது காட்டு யானைகள், சிறுத்தை, மான், காட்டெருதுகளைப் பார்க்கலாம்.

1கொடைக்கானல்..

ஊட்டியைப் போலவே கொடைக்கானலும் குளுமையின் சொர்க்கபுரி. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட கொடைக்கானல் ஏரி மிகவும் புகழ்பெற்றது. இங்குப் படகு சவாரி செய்து மகிழலாம். அப்படியே ஏரியை ரசித்துக்கொண்டே குதிரைச் சவாரியும் சைக்கிள் பயணமும் போகலாம்.

இங்குள்ள தூண் பாறை புகழ்பெற்றது. இங்கே செங்குத்தாகக் காணப்படும் மூன்று பாறாங்கற்களை வைத்தே இந்த இடத்துக்கு இப்பெயர் வந்தது. 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தத் தூண்களின் உச்சியில் இருந்து இயற்கைச் சூழலைக் கண்டு மகிழலாம்.

பேரிஜம் ஏரி காட்டுக்குச் சென்றால் காட்டெருதுகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் ஏரியில் தண்ணீர் குடிக்க வருவதைப் பார்க்கலாம். இதன் பக்கத்திலேயே குழந்தைகளைக் கவரும் நெருப்பு கோபுரம், அமைதிப் பள்ளத்தாக்கு, மருத்துவக் காடு ஆகியவையும் உள்ளன. பைசன் வெல் என்ற இடம் மலையேற்றம் செய்யும் குழந்தைகள், பறவைகள் விரும்பிகளை மகிழ்விக்கும்.

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போலக் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவும் புகழ்பெற்றது. இங்கே பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள், கள்ளிச்செடிகள் ஆகியவையும் வண்ணமயமான பூக்களும் வளர்க்கப்படுகின்றன. இங்குள்ள கோக்கர் வாக் என்ற இடமும் குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரும்.

1872-ம் ஆண்டு இந்த இடத்தைக் கண்டுபிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயரில் இந்த இடம் அழைக்கப்படுகிறது. இயற்கையை விரும்பும் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடமும்கூட. மலையோரமாக நடந்துசெல்வது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். திடீரென வெண் பஞ்சு மேகங்கள் மறைவதும் வருவதுமாக மாயாஜாலம் செய்யும்.

ஊட்டியும் கொடைக்கானலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலை வாசஸ்தலங்கள். கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ள மலை வாசஸ்தலம் ஏற்காடு. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம். ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் கூறுவார்கள். அதுபோல ஏற்காட்டை தென்னிந்தியாவின் விலையுயர்ந்த அணிகலன் என்று அழைக்கிறார்கள்.

1ஏற்காடு…

அடர்ந்த மரங்களையும் தோட்டங்களையும் பார்த்தபடி படகுப் பயணம் செய்ய ஆசையா? ஏற்காடு ஏரிக்குச் சென்றால் ஆசை நிறைவேறும். இதை எம்ரால்டு ஏரி என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள லேடீஸ் சீட் என்ற இடத்தில் தொலைநோக்கி ஒன்று உள்ளது. அங்கிருந்து சேலம் நகரைப் பார்த்து ரசிக்கலாம். மேட்டூர் அணையையும்கூடக் குழந்தைகள் பார்க்கலாம்.

ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கிள்ளியாறு நீர்வீழ்ச்சி. ஆனால், மழை காலங்களில்தான் தண்ணீரைப் பார்க்க முடியும். ஏற்காட்டில் கரடி குகை என்ற ஓர் இடம் உள்ளது. இங்கே கரடிகள் வந்து தங்கியதால் இந்தப் பெயர் என்று கூறுகிறார்கள். இதுவும்கூடப் பார்த்து ரசிக்கக்கூடிய இடம்தான்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions