என்ன பண்ற.. படிக்கிறேன்…

0

விருந்தாளி :– என்ன பண்ற

பையன் :– படிக்கிறேன்

விருந்தாளி :– படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :– அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :– என்னன்னு ?

பையன் :– படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :– ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்

விருந்தாளி :– அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :– ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :– அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் :– டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :– ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :– பார்ரா … நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

பையன் :– எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி :-…..!!! மயங்கி விழுகிறார்

பையன் :– -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

இதான் இந்த உலகம்..   இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல..
சிந்திக்க வேண்டிய விஷயம்…

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions