ஜோக் சொல்ல போறேன்…

0

ஜெயலலிதா அப்போட்ட மருத்துவமனையில் இருக்கும் போது வந்த ஜோக்…

வாத்தியார்: எதுக்குடா ஸ்கூலுக்கு வரல????
மாணவன்: லெட்சுமி செத்துபோச்சு சார்!!!
வாத்தியார்: லெட்சுமி யாருடா????
மாணவன்: எங்க அம்மா சார்!!!
வாத்தியார்: அட எரும அம்மா செத்துடாங்கனு சொல்ல வேண்டியதுதானே????
மாணவன்: நமக்கெதுக்கு சார் வம்பு??? அம்மா செத்துடாங்கனு சொன்னா கைது பன்னுவாங்களாம் சார்!!!!!!

* * * * * * * * 

ஆம்பிளை மனசு தர்மஆஸ்பத்திரி மாதிரி உள்ளே என்ன நடக்குதுனு ஊருக்கே தெரியும்……….!!! ஆனால் பொம்பளை மனசு அப்போலோ ஆஸ்பத்திரி மாதிரி என்ன நடக்குது?எப்படி இருக்குது யாருக்குமே தெரியாது………….!!!!!

* * * * * * * * 

ஒரு செருப்பு மட்டும் காணோம்னா கண்டிப்பா நாய் எடுத்திருக்கும்..

ரெண்டு செருப்பும் காணோம்னா கண்டிப்பா எந்த நாயோ தான் எடுத்திருக்கும்

* * * * * * * * 

சாப்பாட்டுல நீளமா முடி இருக்கேன்னு.. பொண்டாட்டிட்ட கேட்டா… அது காத்துல பறந்து வந்து விழுந்துருக்கும்.. எடுத்து தூக்கி போட்டுட்டு சாப்பிடுங்கன்னு அசால்டா சொல்றா.. 😢😢

சட்டைல நீளமான முடி இருந்ததுக்கு… சண்டைக்கு வரா…!  என்ன லாஜிக்னே புரியல பாஸ்..!!

* * * * * * * * 

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்… எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க… சரியா?

டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800… இந்த மாதம் புதுப் புடவை தான்…

பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்…

அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க…. சரி, சரி அழாதே… அப்பா வரட்டும்… கேக்கறேன்.

அப்பா வந்ததும்: என்னங்க… நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்… இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்…

அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை… என்ன செய்யிறது?… சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க….
=========================

விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..
இப்படிக்கு
நான் அவன் இல்லை

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions