முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்- 11)

0
பிரிவு 9 – குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
 
 திருமணம் : 
‘அல்லாஹ் கூறுகிறான்: ”இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற் குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும் கிருபை யையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ”இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள்ஆண்,பெண் அடிமை களுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசால மானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 24:32)
இமாம் இப்னு கªர் கூறுகிறார்: ”இவ்வசனம் திருமணம் செய்துவைப்பதைக் கடமையாக்குகிறது. சக்திபெற்ற ஒவ்வொருவரும் திருமணம் செய்வது கடமையாகும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.” அதற்கு பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.
”இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்திபெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக் கூடியதா கவும் உள்ளது. அதற்குச் சக்திபெறாதவர் நோன்பு நோற் கட்டும். அது அவருக்கு கேடயமாக உள்ளது.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என இப்னுமஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
திருமணம் வறுமையைப் போக்கக் காரணமாக இருக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்.
”அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான்.” (அல்குர்ஆன் 24:32)
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகக் கூறப்படுகிறது: ”திருமண விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்! அவன் வாக்குறுதி அளித்த பிரகாரம் வறுமையைப் போக்குவான்.”
அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் ஏழைகளாக இருந்தால் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக்கி வைப்பான். அல்குர்ஆன் (24:32)
”திருமணத்தின் மூலம் செல்வத்தை எதிர்பாருங்கள்! அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்குவான்” என இப்னு மஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார். (தஃப்ªர் இப்னுகªர் 5ழூ ழூ94,95)
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 32ழூ ழூ90 ல் குறிப்பிடுகிறார்.
இறைநம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை யும், விவாகரத்துச் செய்வதையும், விவாகரத்து செய்யப் பட்ட பெண்ணை அவள் வேறு ஒரு கணவனை திருமணம் செய்து அவன் விவாகரத்து சொன்ன பின் அவளை திருமணம் செய்யலாம்.
விவாகரத்துச் செய்யப் பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். கிருஸ்தவர்கள் திரும ணத்தை சிலர் மீது தடை செய்துள்ளனர். யாருக்கு திருமணத்தை அனுமதித்திருக்கின்றார்களோ அவர் விவாகரத்துச் செய்வதை அனுமதிக்கவில்லை. åதர்கள் அனுமதித்தாலும் விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் பழைய கணவர் மணம் முடிப் பதை அனுமதிக்கவில்லை. கிருஸ்தவர்களிடத்தில் விவாக ரத்து என்பது கிடையாது. åதர்களிடத்தில் விவாகரத்து செய்யப்படுவாள். ஆனால் அல்லாஹ் இந்த இரண்டையுமே அனுமதித்துள்ளான்.
‘அல்ஹத்யுன் நபவிய்யு’ என்ற நூலில் 3ழூ ழூ149 ல் இப்னுல் கையிம் கூறுகிறார்கள்.
திருமணத்தின் நோக்கங்களில் முக்கியமானதான உடலுறவு கொள்வதைப் பற்றி விளக்கும்போது, உடலுறவு என்பது மூன்று விஷயங்களுக்காக உள்ளது.
1. சந்ததிகளைப் பாதுகாப்பது. மனிதவர்க்கம் நிலைத்தி ருக்க வேண்டும், எத்தனை மனிதர்கள் வெளியாக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமோ, அதுவரைத் தொடரும்.
2. மனித உடலில் தேங்கி நின்று இடைåறு கொடுக்கும் இந்திரியத்தை வெளியாக்குவது.
3. ஆசையை நிறைவேற்றி இன்பம் அடைவது. அல்லாஹ் கொடுத்த சுகபாக்கியத்தை அனுபவிப்பது.
திருமணத்தால் பலவிதமான நன்மைகள் உள்ளன. அவை: விபச்சாரத்திலிருந்து பாதுகாக்கிறது. தடுக்கப்பட்டுள்ளதை பார்ப்பதை விட்டும் தடுக்கிறது. இனப்பெருக்க மும், குடும்பப் பாதுகாப்பும் ஏற்படுகிறது. கணவன் மனைவியரிடையில் ஒத்துழைப்பு நிலவுகிறது இஸ்லாமிய சமூகத்தின் அடிக்கல்லாக இருக்கின்ற நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் கணவன் மனைவியின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
கணவன் தன் மனைவியின் அனைத்துப் பொறுப்புக் களையும் ஏற்று அவளைப் பாதுகாக்கின்ற நிலையும், மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்கின்ற நிலையும், வாழ்க்கையில் ஒரு பெண் தன் உண்மையான கடமையை நிறைவேற்றுகின்ற நிலையும் உருவாகிறது.
பெண் இனத்தின் எதிரிகளும் சமூகவிரோதிகளும் வாதாடுவது போன்று வீட்டுக்கு வெளியே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பணியாற்றவேண்டும் என்று கூறி பெண்களை தங்கள் வீட்டை விட்டும் வெளியேற்றி விட்டார்களே அதைப்போன்று அல்ல. இவர்கள் பெண் களை வீட்டை விட்டும் வெளியேற்றியது மட்டு மல்லாமல் அவள் செய்யவேண்டிய சரியான கடமையை விட்டும் அவளைத் தனிமைப்படுத்தி விட்டனர். மற்றவர்கள் செய்யவேண்டிய வேலையை அவளிடம் ஒப்படைத்து விட்டனர். இதனால் குடும்ப ஒழுங்குமுறை கெட்டுப் போய்விட்டது. கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது. வெறுப்புடன் கணவனோடு வாழ வேண்டிய நிலை உருவாகிறது.
ஷேக் முஹம்மத் அமீன் »ன்கீதீ தம் ‘அள்வாவுல் பயான்’ என்ற தஃப்ªரில் 3ழூ ழூ422 ல் குறிப்பிடுகிறார்.
அல்லாஹ் என்னையும் உன்னையும் அவன் விரும்பி நேசிக்கின்றவற்றில் செலுத்துவானாக! அறிந்துகொள்!
ஆணையும் பெண்ணையும் எல்லாச் சட்டங்களிலும் சமம் எனக்கூறுவது அல்லாஹ்வின் செய்திக்கும் அறிவுக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது இறைமறுப் பாளர்களின் தவறான சிந்தனையாகும். படைத்த இறை வனின் சட்டத்திற்கு மாற்றமானதாகும். மனித சமுதாய ஒழுங்குமுறைகளுக்கு இடைåறு ஏற்படுத்தும் குழப்ப மான பல விஷயங்கள் உள்ளன. அகக்கண்கள் குருடானவர்களைத் தவிர மற்றவர்கள் இத்தீங்குகளை நன்கு புரிந்து கொள்வர்.
பெண்களுக்கென சில தனித்தன்மைகளைக் கொண்டு அவர்கள் மனித சமுதாயத்தை உருவாக்குவதில் பலவகையில் பங்கு வம்க்கின்றார்கள். பெண்களுக்கென உள்ள கற்பம் தரித்தல், பிரசவித்தல், பாலூட்டுதல், குழந்தை வளர்த்தல், வீட்டுப் பணிவிடை செய்தல், மேலும் வீட்டுவேலைகளான சமையல், மாவு குளைத்தல், வீடு சுத்தம் செய்தல் இது போன்ற பணிகளை மனித சமுதாயத் திற்கு தன் வீட்டிற்குள் திரைமறைவில் பாதுகாப்பாகவும், பத்தினி தனத்துடனும் இருந்து தன் கன்னியம் மரியாதை தன் உயர்வு இவற்றைப் பாதுகாத்து செய்வதினால், ஆண்கள் செய்யும் பணிகளிலிருந்து குறைந்தது எனக்கூற முடியாது.
இறைமறுப்பாளர்களும் அவர்களைப் பின்பற்று கின்ற அறிவீனர்களும், ஆண்கள் செய்வது போன்ற பணிகளை வீட்டின் வெளியே பெண்களும் செய்வதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது எனக் கருதுகின்றனர். ஆனால் ஒரு பெண் தான் கற்பமுற்றிருக்கும் போதும், குழந்தைக்கு பால் கொடுக்கும்போதும், பிரசவத்தீட்டின் போதும் கடினமான எந்த வேலையும் செய்யமுடியாது. இதை நேரடியாகப் பார்த்து வருகின்றோம். ஓர் ஆணும் அவருடைய மனைவியும் வெளியே வேலைக்குச் செல்வார் களானால் வீட்டில் குழந்தைகளுக்கு பால் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தல், வேலையிலிருந்து வரும் கணவருக்கு உணவு கொடுத்தல் போன்ற பணிகள் பாழாம் விடும். கூலிக்கு ஒருவரை வேலைக்கு நியமிப்பாளானால் அந்த வீட்டில் பெண் வெளியே செல்வதால் எந்த இழப்பை அவன் சந்தித்தாளோ அதே இழைப்பைத் தான் அவள் தன் வீட்டில் இப்போதும் சந்திக்க வேண்டியது ஏற்படுகிறது. இதிலிருந்து திட்டவட்டமாக விளங்கிக் கொள்ளலாம். ஒரு பெண் வெளியே வேலைக் குச் செல்வதால் அவளிடம் மென்மையான குனம் போய் விடுகிறது மார்க்கத்திற்கும் இழப்பு ஏற்படுகிறது.
இஸ்லாமிய பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மயக்குகின்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதே! இதுபோன்ற விளம்பரங்களால் ஏமாற்ற மடைந்த பெண்களின் நிலை, அவர்கள் கெட்டுப்போன தற்கும், தோல்வியைக் கண்டதற்கும் மிகச் சிறந்த ஆதார மாக இருக்கிறது. இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு திருமண வயது வந்ததும் விரைவாக திருமணம் செய்து கொள்! படிப்பைத் தொடரவேண்டும், வேலையில் சேரவேண்டும் என்ற காரணங்களையெல்லாம் கூறி திருமணத்தைப் பிற்படுத்தாதே! வெற்றிகரமான திருமணம் உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நிம்மதியைத் தருகிறது. அனைத்து படிப்புகளுக்கும், உத்தியோகங் களுக்கும் பகரமாக திருமணம் அமைந்துள்ளது. திருமணத்திற்கு பகரமாக எதுவும் அமையாது.
இஸ்லாமியப் பெண்ணே! உன்னுடைய வீட்டு வேலைகளை முறையாகக் கவனித்ததுக் கொள்! உன்னு டைய குழந்தைகளை ஒழுங்காக வளர்த்துக் கொள்! இது தான் உன்னுடைய வாழ்க்கையில் லாபகரமான அடிப் படை வேலையாகும். அதற்குப் பகரமாக வேறு எதையும் ஆக்கிக் கொள்ளாதே! ஏனெனில் இதற்குப் பகரமாக எதுவும் ஆகமுடியாது. ஒரு நல்ல கணவனைத் தேர்ந் தெடுத்து திருமணம் செய்யத் தவறிவிடாதே!
”யாரிடத்தில் மார்க்கப் பற்றும் நல்ல குணமும் இருக்கக் காண்கிறீர்களோ அப்படிப்பட்ட ஆண் வந்தால் அவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். அப்படி செய்ய வில்லையானால் ப+மியில் குழப்பமும் சோதனைகளும் ஏற்பட்டு விடும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
 திருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் :
திருமணம் முடிக்கப்பட வேண்டிய பெண்கள் மூன்று வகையாக இருக்கின்றனர். ஒன்று, அவள் சிறிய வயது டையவளாக இருக்க வேண்டும். அல்லது பருவ மடைந்த கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டும். அல்லது விதவைப் பெண்ணாக இருக்கவேண்டும். இவர்கள் ஒவ்வொரு வருக்கும் தனிச்சட்டம் உள்ளது.
1. பருவமடையாத சிறிய கன்னிப்பெண்ணைப் பொறுத்த வரை அவளின் அனுமதியின்றி அவளின் தந்தை அவளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது கிடையாது.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு தன் மகள் ஆறு வயதாக இருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் தம்முடைய ஒன்பதாவது வயதில் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இமாம் ஷவ்கானி அவர்கள் தன் நைலுல் அவ்தார் 6ழூ ழூ128, 129 ல் குறிப்பிடுகிறார்கள்.
தந்தை தன் மகளை அவள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுப்பது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. வயது அதிகமான வருக்கு வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது.
முக்னி என்ற நூல் 6ழூ ழூ487 ல் கூறப்படுகிறது. இப்னுல் முன்திர் கூறுகிறார்கள்.
நாம் தெரிந்த மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஏகோபித்துக் கூறுவது என்னவென்றால் பொருத்தமான மாப்பிள்ளைக்கு ஒரு தகப்பன் வயது குறைந்த தன் பெண் ணைத் திருமணம் செய்து கொடுப்பது அனுமதிக்கப் பட்டது தான்.
தன் மகள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆறு வயதாக இருந்த போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகத்திற்கு திருமணம் செய்து வைத்தார்கள், என்ற செய்தி வயது அதிகமான ஆண்களுக்கு வயது குறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்பவர்களுக்கு மிகப்பெரிய மறுப்பாக உள்ளது. தங்கள் அறியாமையின் காரணத் தினால் தான் இதை அவர்கள் வெறுத்து மறுக்கவேண்டும். அல்லது வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கவேண்டும்.
2. வயது வந்த கன்னிப்பெண் அவளுடைய அனுமதியோடு தான் திருமணம் செய்யப்படவேண்டும், அவள் அமைதியாக இருப்பதுதான் அவளுடைய அனுமதி, கன்னிப் பெண்ணின் அனுமதியின்றி அவள் திருமணம் செய்து வைக்கப்படக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! அவளுடைய அனுமதியை எப்படிப் பெறுவது? என நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அவள் வாய் மூடி இருப்பதுதான் அவளுடைய அனுமதி.’ என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அவளைத் திருமணம் செய்து கொடுப்பது அவளு டைய தந்தையாக இருந்தாலும் சரிதான் அவளுடைய அனுமதி அவசியம் தேவை என்று அறிஞர்களின் சரியான கூற்று தெரிவிக்கிறது.
இப்னுல் கையிம் அவர்கள் ‘அல்ஹதிய்யு’ என்ற நூலில் 5ழூ ழூ96 குறிப்பிடுகிறார்கள். ”இதுவே சென்றுபோன நல்லோருடைய ஏகோபித்த முடிவாகும். இவ்வாறே இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம், அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரும் குறிப்பிடுகின்றனர், அல்லாஹ்விற்காக இதே கருத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். அதைத் தவிர வேறு கருத்தை ஏற்க மாட்டோம், அதுவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு ஏற்றதாக உள்ளது.”
3. கன்னித் தன்மையை இழந்தவளின் அனுமதியின்றி அவளைத் திருமணம் செய்து வைப்பது கூடாது. அவளுடைய அனுமதியை வாயினால் சொல்லிக் காட்டவேண்டும். கன்னிப் பெண்ணைப் போன்று மவுனமாக இருப்பது போதுமாகாது.  முக்னி என்ற நூலில் 6ழூ ழூ493 ல் சொல்லப்படுகிறது
கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரை அவள் வாயினால் சப்தமிட்டு பதில் கொடுத்தால்தான் அவள் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவது நாவாக இருக்குகிறது. அனுமதி வேண்டும் என்று எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நாவினால் மொழியவேண்டும் என்பதும் கவனிக்கப்படும்.
‘மஜ்மூவு ஃபதாவா’ என்ற நூலில் 32ழூ ழூ39,40 ல் ஷேகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெண்ணின் அனுமதியின்றி அவளை யாரும் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது. இவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஒரு பெண் திருமணத்தை வெறுத்தால் சிறிய பெண் நீங்களாக அவளை நிர்பந்தப்படுத்தக்கூடாது. சிறிய பெண்களைப் பொறுத்த வரையில் அவளுடைய தந்தை அவளைத் திருமணம் செய்து வைப்பார். அவளிட மிருந்து அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. தந்தையாக இருந் தாலும் மற்றவர்களாக இருந்தாலும் கன்னித் தன்மையை இழந்த பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏகோபித்த கருத்துப்படி அவளுடைய அனுமதி அவசியமாகும்.
இதுபோன்றே பருவமடைந்த கன்னிப்பெண்ணை யும் அவளுடைய அனுமதியுடன் தான் தந்தை, பாட்டன் அல்லாதவர்கள் மணம் முடித்து வைக்கவேண்டும். தந்தையோ, பாட்டனோ மணம் முடித்து வைப்பார்களா னால் அவளிடம் அனுமதி கேட்கவேண்டும். அனுமதி கேட்பது கட்டாயமா இல்லையா என்பதில் கருத்துவேறு பாடு உள்ளது. சரியான கருத்து என்னவென்றால் அனுமதி கேட்பது கட்டாயமானதாகும்.
பெண்களின் அதிகாரியாக இருப்பவர் பெண்ணைத் திருமணம் செய்துவைப்பதில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளவேண்டும். பெண்ணை மணம் முடிப்பவன் பொருத்தமானவனா? என்பதையும் கவனிக்கவேண்டும். காரணம் பெண்ணுடைய நலனுக்காகவே மணம் முடிக்கப்படுகிறதே தவிர அவனுடைய நலனுக்காக அல்ல,
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions