குழந்தை பிறந்த பின் தாம்பத்தியத்தில் ஏற்படும் மாற்றங்கள்

0

1ருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.

இதற்கு காரணம் பிள்ளை பிறந்த போது அவர்களது பிறப்புறுப்பு விரிவடைந்ததன் காரணமாக மிகுந்த வலி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும், அவர்களது அங்கு ஏற்பட்ட காயங்கள் குணமடையும் வரையிலும் உடலுறவு வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற ஏறத்தாழ நான்கைந்து மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்து, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் என்ன உணர்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதைப்பற்றி இனிக் காண்போம்.

ஆய்வு சமீபத்தில் குழந்தை பிறந்த பிறகு தம்பதி மத்தியில் உடலுறவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 1,118 தம்பதிகள் பங்கேற்றனர். இவர்கள் மத்தியில் குழந்தை பிறந்ததற்கு முன்பு, பின்னர் உடலுறவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

94% பேர் தாங்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடுகிறோம் என்றும், 60% பேர் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் சிறிதளவு மேலோங்கி இருப்பதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் அச்சம் முதன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதி மத்தியில் ஏறத்தாழ மூன்றில் இருந்து ஐந்து மாதமாவது இந்த உடலுறவு வாழ்க்கை தடைப்பட்டு போயிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு, தங்கள் துணைக்கு தன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறது.

உடல்வாகு குழந்தை பிறந்த பிறகு மாறும் தன் உடல்வாகினை தனது கணவனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆயினும் 14% பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தைரியத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

வரம் குழந்தை பிறப்பது என்பது வரம் போன்றது. வரம் கிடைத்த பிறகு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள கூடாது.

கணவன், மனைவி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போதும் சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு இருமுறையும், பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையும் தான் ஈடுபட விரும்புகிறார்கள்.

வலி ஏற்படலாம் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions