சபதங்கள்  – ஆரூர் புதியவன்

0
இவர்கள்
மந்திரவாதிகளா?
அரசியல் வாதிகளா?
மக்கள்
குழம்பி நிற்கிறார்கள்…!
மாயா ஜாலங்களை
வார்த்தைகளில் காட்டும்
இவர்களின்
வாழ்க்கையும் கூட
மாய ஜாலங்களின்
மையமாகவே
உள்ளது…
சமாதியில்
தியானம்…
சமாதியில்
சபதம்…
ஆன்மாவோடு
பேசுதல்…
ஆவியோடு
உறவாடல்…
என
நாளும் நீளும்
இவர்களது
நடவடிக்கைகளைக்
கவனிக்கும்போதுதான்
ஜனநாயகம்
ஒரு
சூனியப் பிரதேசமாய்
ஆக்கப்பட்டிருப்பதை
அறிய முடிகிறது…
தியானம் செய்தால்
மன அமைதி வரும்
என்றார்கள்…
ஒருவர்
சமாதியில்
தியானம் செய்தார்
மாநில அமைதியே
சமாதிக்குப் போய்விட்டது…
நாற்காலியில்
இருந்தபோது
மக்கள் நலனை
அனுப்பிவிட்டு,
நாற்காலியை
இழந்தபிறகு
ஊர்வலம் போகிறார்கள்,
சமாதிக்கு…
தனிமனித வழிபாடு
சீரழித்த அரசியலை,
சமாதி வழிபாடு
சாகடிக்க முயல்கிறது…
போர்க்களம் புகும்முன்
சபதம் எடுத்தது
முடியாட்சி காலம்…
சிறைக்குச் செல்லும்முன்
சபதங்கள் செய்வது
குடியாட்சி காலம்…
முதலில்
மண்ணை அடித்தார்கள்
பிறகு
மண்ணில் அடிக்கிறார்கள்…
அரசியல்
பரமபதம்
அதில்
அரங்கேறும்
பலசபதம்
அபராத புருஷர்களான
அவதார புருஷர்களே…?
கபட நாடகங்கள்
மறைத்த
சபத நாயகர்களே…?
உங்களுக்கான
சபதங்கள் எடுக்க
ஓங்கி அடிக்கிறீர்கள்…
மக்களுக்காக
சில சபதங்கள்
எடுக்கத்தான்
நிரந்தரமாய்
மறக்கிறீர்கள்…
குடியை அழிக்கும்
குடியை ஒழிக்க…
பீதியை விதைக்கும்
சாதியைப் புதைக்க…
எளியோர்க்கு காரியம்
எளிதாய் நடக்க…
லஞ்சம் மறுக்கும்
நெஞ்சம் படைக்க…
கல்வியும்,மருத்துவமும்
கடையோர்க்கும் கிடைக்க…
வெறுப்பு அரசியலை
நெருப்பில் பொசுக்க…
இளையோர்க் கெல்லாம்
வேலை கொடுக்க…
ஊழல் இல்லா
உலகம் அமைக்க…
சபதங்கள் செய்ய
உள்ளதா எண்ணம்…
இல்லை
உங்கள் பாணி
சபதங்களே
உள்ளதா
இன்னும்…?
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions