இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் !

0

இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் !

10

முன்னவர் முஸ்லிம் அடையாள அரசியலை விரும்பாத காங்கிரஸ்காரர், பின்னவர் அதிகார வர்க்கம் மிரட்டியும் அடையாள அரசியலை துறக்காத முஸ்லிம் லீகர்.

முன்னவர் காங்கிரஸ் தலைவராகவும், கல்வி அமைச்சராகவும் இருந்து நவீன இந்திய நாட்டின் சிற்பியாக விளங்கியவர். பின்னவர் முஸ்லிம் லீகின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து முஸ்லிம் சமூகத்தின் குரலாக விளங்கியதோடு நாட்டின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.

முன்னவர் உருது இலக்கியத்தின் தந்தை எனுமளவுக்கு உருது மொழிக்கு வளம் சேர்த்தவர். பின்னவர் நாட்டின் தேசிய மொழியாக இருக்க என் தாய் மொழி தமிழுக்கே தகுதி என அரசியல் அவையில் வாதிட்டவர்.

முன்னவர் மௌலானா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் திருக்குர்ஆனுக்கு உருதுவில் விளக்கவுரை எழுதிய ஆன்மீக ஞானி. பின்னவர் ஐந்து வேளை தொழுகையோடு நள்ளிரவு தஹஜ்ஜத் தொழுகையையும் கைவிடாதவர். இரண்டு ரக்அத் தொழுதே பிறகே அரசியல் முடிவுகளை எடுத்த இறைநேசர்.

11

முன்னவர் புரட்சிகர இயக்கங்களில் பங்கு கொண்டவர். இந்திய விடுதலைக்காக போராடியதற்காக பத்தாண்டுகளுக்கு மேல் சிறைகளில் அடைக்கபட்டவர். தனது எழுத்துக்களால் ஆங்கிலேய அரசை நடுங்க வைத்த வீராதி வீரர். பின்னவர் கிலாபத் இயக்கத்தில் தொடங்கி நாட்டின் விடுதலைக்காக நடந்த ஒவ்வொரு போராட்டத்திலும் களம் கண்டவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு காந்திஜியின் அழைப்பை ஏற்று கல்லூரி படிப்பை துறந்த மாவீரர்.

முன்னவரோ ஆங்கிலேயரை நடுங்க வைத்த மஹாத்மா காந்திஜியின் தீவிர விசுவாசி. பின்னவரோ காந்தியாரையே கலங்கடித்த முஹம்மது அலி ஜின்னாவின் தளபதி.

முன்னவர் நாட்டு விடுதலைக்காக சிறையில் இருக்கும் போதே தனது மனைவியை இழந்தவர். பின்னவர் இந்திய,சீன போரின் போது தனது ஒரே மகனை போருக்கு அனுப்பி உயிரை இழக்க துணிந்தவர்.

முன்னவர் ஆங்கிலேய அரசியல் அடிமைத்தளத்திலிருத்து விடுவிக்க போராடியவர். பின்னவர் விடுதலைக்கு பிறகும் அடிமைத்தன அரசியல் வேண்டாம் என போராடியவர்.

முன்னவர் எளிமையின் இருப்பிடம். நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் இறக்கும் போது புத்தகங்களை மட்டுமே சொத்துக்களாக விட்டு சென்றவர். பின்னவரோ எளிமையின் இலக்கணம்.கோடிகளில் தொழில் நடத்தினாலும் நாட்டுக்காக அனைத்தையும் துறந்தவர். சைக்கிள் ரிக்‌ஷாவில் அலுவலகத்துக்கு சென்றவர். பண்டித நேருவே வியக்கும் வண்ணம் தவ வாழ்வு வாழ்ந்தவர். இறக்கும் போது அவரது சொத்தாக ஒரே ஒரு ஒட்டு வீட்டை மட்டுமே விட்டு சென்றவர்.

முன்னவர் டெல்லி ஜூம்ஆ மஸ்ஜிதின் வெளியே அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பின்னவர் சென்னை பெரிய மஸ்ஜிதின் வெளியே ஆழ்ந்து உறங்குகிறார்.

முன்னவர் மௌலானா அபுல் கலாம் ஆஜாத் !
பின்னவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் !

வாட்ஸ்அப் குழுமத்தில் வந்தது

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions