மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்

0
மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்

 வேலைவாய்ப்பு பெறுவது உலகளவில் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் பெண்கள். அந்த பெண்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். பணியிடங்களில் பெண்களுக்கு சம அளவு வேலைவாய்ப்பு தராத காரணத்தால் உலக அளவில் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
திறமை மற்றும் அறிவு :

ஆண்களும், பெண்களும், அறிவில் சமமானவராகவே கருதுதல் வேண்டும். தற்போது பெண்கள் ஆண்களை விட மேலான சமூக பொளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

கல்விதிறன் :

முன்பு, பெண்களுக்கு உயர்கல்வி என்பது மறுக்கப்பட்டன. அதானல் அவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டன. தற்போது, பெண்கள் உயர்கல்வியை பெற அனுமதிக்கப்பட்டதால், அவர்களின் திறமைகள் வெளிப்பட்டன இதன் வாயிலாக தனிப்பட்ட பயன் அல்லாத ஒட்டு மொத்த உலகமே பயன்பெற்றது.

சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி:

மகளிர் மேம்பாடடின் முக்கிய பயனாக ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சி ஏற்படுகிறது. பெண்கள் பெறும் வருவாய் அவர்களுக்கு மட்டுமின்றி சமூக வளர்ச்சிக்கும் பயனாக இருக்கும்.

வறுமை ஒழிப்பு நிகழ்கிறது :

மகளிர் மேம்பாட்டின் காரணமாய் வறுமை ஒழிகிறது. ஆணின் வருவாய் அக்குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாத போது பெண்ணின் வருவாய் அக்குடும்பத் தேவையை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் வருவாய் கூடுதலாய் கிடைக்கும் போது அக்குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து மீளமுடியும்.

நாட்டின் முன்னேற்றம்:

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் பங்களிப்பு அவசியமாகிறது. அந்த வகையில் பெண்கள் நாடே வியக்கும் வகையில் மெச்சதகுந்த சாதனைகள் மருத்துவம், சமூக பணி, பொறியியல் என்றவாறு பல துறைகளில் புரிந்துள்ளனர். எனவே மகளிர் மேம்பாடு குறித்து அறிவதும், அதனை மேம்படுத்தும் வகையில் அனைவரும் ஈடுபடுவதும் நமது உறுதி மொழியாக இருக்கட்டும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions