அல்லாஹ்வின் உதவி..

0

1Cஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் கிடந்தார்கள்….!

கணவர் அலி(ரலி) பக்கத்தில் இருந்து பனிவிடைகள் செய்தார்கள். அப்போது மனைவியை நோக்கி. அன்பு மனைவியே தாங்களுக்கு பிடித்த மானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள்….!!!!

இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத பாத்திம(ரலி) அவர்கள் இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள். சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள். கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை….!!!!

அடுத்துள்ள ஒரு ஊரில் தான் மாதுளம் பழம் கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று ஒரு பழம் வாங்கி கொண்டு வீடு நோக்கி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு ஏழைமனிதர் ரோட்டு ஓரத்தில் மயங்கி கிடந்தார். உடனே அலி(ரலி) அவர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள்….!!!!

அப்போது அவர் தம்பி பணிவிடைக்கு நன்றி எனக்கு ஒரு ஆசை இருக்கு அதை பூர்த்தி செய்வீர்களா? என்றார். சரி சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்றார்கள். உடனே அவர் எனக்கு மாதுளம் பழம் சாப்பிட நீண்ட நாட்களாக ஆசையாக இருக்கிறது வாங்கி தருவீர்களா! என்றதும் அதிர்ச்சி அடைந்த அலி(ரலி) அவர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்….!!!!

இருப்பதோ ஒன்று அதை இதுவரை எதுவுமே வாங்கி கேட்டிராத மனைவிக்கா? அல்லது இந்த வழிப் போக்கருக்கா? என்ற போராட்டம் மனதில் ஒடியது முடிவில் இது அல்லாஹ்வின் சோதனை என்று அந்த முதியவருக்கே கொடுத்து விட்டார்கள்….!!!!

பின்பு சோர்வுடன் வீடு நோக்கி வந்தார்கள் நோயில் கிடந்த பாத்திமா(ரலி) மிக்க முகலர்ச்சியுடன்1E கணவரை வரவெற்றார்கள். வழியில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்கள். அதற்கு பாத்திமா(ரலி) தாங்கள் செய்த தர்மத்தால். அல்லாஹ் எனது நோயை குணமாக்கினான் என்றார்கள்….!!!

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்த போது சல்மான்பாரிசி(ரலி) அவர்கள் நின்றார்கள் கையில் ஒரு சிறிய கூடை இருந்தது.இறக்கி வைத்து விட்டு இவைகளை இன்னார் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்று கூடையை ஒப்படைத்தார்கள்….!!!!

கூடையில் மாதுளம் பழம் இருந்தது. அலி(ரலி) பாத்திமா(ரலி) இருவரும் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹவைப் புகழ்ந்தார்கள்….!!!!

உடனே அலி(ரலி) கூடையில் இருந்த மாதுளம் பழங்களை எண்ணினார்கள். அதில் 9-மாதுளம் பழங்கள் தான் இருந்தன. உடனே அலி(ரலி) அவர்கள் ஸல்மான் பாரிசி(ரலி) அவர்களே வீடு மாறி கொண்டு வந்து விட்டீர்கள் இது எங்களுக்குரியது அல்ல. என்றார்கள் உங்களுக்காகத்தான் உங்களுக்கே உரியது தான் என்றார்கள்….!!!!

அதற்கு அலி(ரலி) அவர்கள் அல்லாஹ் குர் ஆனில் “மனிஜாஅ பில் ஹஸனத்தி அஸரத்தி அம்சாலிஹா” ஒரு நன்னை செய்தால் அதற்கு அதுபோல 10 வழங்குவோம் என்று அல்லாஹ் சொல்கிறான்…!!!!

சற்று முன்நான் ஒரு மாதுளம் பழம் தர்மம் செய்தேன் ஒன்ருக்கு பத்து அல்லவா? வந்திருக்க வேண்டும் கூடையில் 9 பழங்கள் தானே உள்ளது என்று விள்க்கமளித்தார்கள். இதைக் கேட்ட ஸல்மான் பாரிசி(ரலி) அவர்கள் சட்டையில் மறைத்து வைத்துள்ள ஒரு மாதுளம் பழத்தை வெளியே எடுத்து கூடையில் போட்டார்கள்….!!!!

அலியே! உங்களை சோதிப்பதற்காகத்தான் வழியில் ஒரு பழத்தை எடுத்து மறைத்தேன் என்றார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது, அல்லாஹ்வின் உதவியை நினைத்து மகிழ்ந்தார்கள்….!!!!

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions