அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் இரவு சிறப்பு நிகழ்ச்சி

0

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் இரவு சிறப்பு நிகழ்ச்சி; மல்லவி முஹம்மது ரிழா பாக்கவி பங்கேற்பு.

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இந்தியன் முஸ்லிம் பேரவை, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், காயிதே மில்லத் பேரவை இணைந்து ரமலான் பிறை 17 இரவு (11-6-2017) அன்று தராவீஹ் தொழுகை முடிந்து பத்ரு ஸஹாபாக்கள் இரவு சிறப்பு பயான் நடைப்பெற்றது.  அய்மான் சங்க தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் தலைமை வகித்தார்.

2 10 18 20 21 23

பனியாஸ் மெடீரியல் ஹாஜி ஹமீது மரைக்காயர், சமுதாய புரவலர் ஹாஜி நோபல் மரைன் சாகுல் ஹமீது, மற்றும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் , இந்திய முஸ்லிம் பேரவை, காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அய்மான் சங்க துணை பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார். மவ்லவி ஹூசைன் மக்கி ஆலிம் மஹ்லரி துவக்கவுரை நிகழ்த்தினார்.

தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளரும் புதுவயல் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவி ஏ.ரிழா பாஜில் பாகவி அவர்கள் பத்ரு போர் குறித்த வரலாறுகளை எல்லாம் நினைவுப்படுத்தி சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பல்வேறு ஊர் ஜமாஅத் பிரமுகர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

துஆவுடன் கூட்டம் சிறப்புடன் நிறைவுப்பெற்றது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions