பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

0

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

வீட்டில் பண் குழந்தைகள் இருந்தால் குதூகலத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் குறைவில்லை. குட்டி தேவதைகள் அவர்கள். வீட்டை ஆளும் இளவரசிகளாக வலம் வருபவர்களும் அவர்கள்தான். அதனால் அவர்களது பிறப்பில் இருந்தே பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள். அக்கறையாய் சேமிப்பார்கள். அவர்களது ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்ற போராடுவார்கள். எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அவர்கள் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் பெண் குழந்தைகளின் பெருமைகளை நினைத்துப்பார்ப்பதுடன், அவர்களது பாதுகாப்பிலும், மேம்பாட்டிலும் அதிக அக்கறை செலுத்தவும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

வீடுகளில் பெண் குழந்தைகள் வளர வளர அவர்களது பெற்றோருக்கு பொறுப்புடன் கூடிய பயம் அதிகரிக்கும். அதனால் சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களுக்கு கட்டுப்பாடுகள் மிகுதியாக இருக்கும். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை என எல்லாமும் பெற தகுதியானவர்களே. ஆனால் பெண்கல்வி, வன்கொடுமை உள்ளிட்டவை பற்றிய புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் உள்ளன.

* உலக அளவில் 106 ஆண்களுக்கு, 100 பெண்கள் என்ற விகிதத்தில் குழந்தை பிறப்பு உள்ளது.

* உலகில் 6.6 கோடி பெண் குழந்தைகள் பள்ளி செல்வதில்லை என்கிறது யுனெஸ்கோ அமைப்பு. 3.3 கோடி பெண் குழந்தைகள் ஆரம்ப கல்வியுடன் நின்றுவிடுகிறார்கள்.

* படிப்பறிவுள்ள தாய்க்குப் பிறக்கும் பெண் குழந்தைகளே 5 வயதை தாண்டி வாழும் வாய்ப்பை 50 சதவீதம் அதிகமாக பெறுகின்றன. படிப்பறிவு பெற்ற தாய்மார்கள், பெண் குழந்தைகள் தங்களைவிட 2 மடங்கு அதிகமாக கல்வியறிவு பெற உதவுகிறார்கள்.

* ஆண்டுதோறும் 15 கோடி பெண்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாவதாக ஒரு புள்ளி விவரம் உள்ளது. இதில் 50 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வேதனையான உண்மை.

* மூன்று வினாடிக்கு ஒரு பெண்ணிற்கு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

* சிறுமிகள் 8 ஆண்டுகள் கல்வியறிவு பெற்றால், அவர்களுக்கு எதிரான குழந்தை திருமணங்களின் அளவு குறைகிறது.

* ஆணைவிட ஓராண்டு கூடுதலாக கல்வியறிவு பெற்ற பெண்ணால், ஆணைவிட கூடுதலாக 20 சதவீத வருமானம் ஈட்ட முடியும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

* இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு ஒரு சதவீதம் அதிகரித்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) மதிப்பு சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என்று சர்வதேச கல்வி பிரசார அமைப்பு கணித்துள்ளது.

* ‘கேர்ள் பிரண்ட்’ என்ற ‘தோழி’ என்று பொருள்படும் வார்த்தை முதன் முதலாக 1859-ல் பதிவாகி இருக்கிறது.

* இங்கிலாந்தில் 1929-க்கு முன்புவரை பெண்கள் 12 வயது அடைந்துவிட்டால் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இந்தியாவிலும் பழங்காலத்தில் குறைந்த வயதில் திருமணங்கள் நடந்துள்ளன. தற்போது பெண்கள் திருமணம் செய்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.

* அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது உணரப்பட வேண்டும். 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து, தாய்மையடைந்த தாய்மார்களில் பெரும் பாலானவர்கள் பிரசவ காலத்தில் மரணம் அடையும் நிலை ஏற்படுகிறது.

* 17 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தை பெற்றால், ஒரு வயதிற்குள் குழந்தை மரணம் சம்பவிக்கும் விகிதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக இன்னொரு சர்வே குறிப்பிடுகிறது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions