மேலத்திருப்பந்துருத்தி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை – வக்கீலுக்கு வலைவீச்சு

0

மேலத்திருப்பந்துருத்தி அருகே உள்ள நடுக்காவேரி பாஜார் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜன் மகன் சுரேஷ்குமார். தஞ்சை கோர்ட்டில் வக்கீலாக பணி செய்து வருகிறார்.

இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தொடர்ந்து சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர் மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமியின் சித்தி பாத்துவிட்டார். உடனே நடந்த சம்பவம் குறித்து அவர் சிறுமியின் தாயார் ஜெயந்தியிடம் கூறினார்.

இது குறித்து ஜெயந்தி நடுக்காவிரி போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயா திருவையாறு டி.எஸ்.பி அன்பழகனிடம் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வக்கீல் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions