மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.

0
மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரை அறிவோம்

மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மற்றும் 25வது அரசர் ஜெயச்சாமராஜா. இவர் காலத்தில் தான் இந்தியா சுதந்திரம்மடைந்தது. இவர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

1919 ஜீலை 19ந்தேதி பிறந்தார் ஜெயச்சாமராஜா. இவரது தந்தை கிருஷ்ணராஜா உடையார் மைசூர் மன்னராக இருந்தார். 1940ல் கிருஷ்ணராஜா உடையார் மறைவுக்கு பின்பு, ஜெயச்சாமராஜா அரசராக முடிசூட்டப்பட்டார். இசை மீது பேரார்வம் கொண்டவராக விளங்கினார். 1950 வரை சமஸ்தானத்தின் அரசராக இருந்தார்.

1399ல் யாதுராய உடையாரால் துவங்கப்பட்டது மைசூர் அரசு. விஜயநகர பேரரசின் கீழ் இயங்கியது மைசூர் சமஸ்தானம். உடையார் வம்சத்தினர் விஜயநகர பேரரசுக்கு கப்பம் கட்டிக்கொண்டு வந்தனர். விஜயநகர பேரரசு வீழ்ச்சியை தொடங்கியதும் மைசூர் சமஸ்தானம் தன்னிச்சையாக செயல்படதுவங்கியது. 1565 முதல் 1799 வரை தன்னாட்சியுடன் ஆட்சி செய்தனர் மைசூர் மன்னர்கள்.

தன்னிச்சையாக இயங்க தொடங்கிய போது மன்னராக இருந்த முதலாம் ராச உடையார் காலத்தில் தான் மைசூர் சமஸ்தானத்தின் எல்லை விரிவாக்கம் நடைபெற்றது. முதலாம் ராச உடையார் போர் மூலம், சீரங்கப்பட்டினத்தை கைப்பற்றி நாட்டின் முக்கிய பகுதியாக அதை மாற்றினார். 1610ல் நாட்டின் தலைநகராக சீரங்கப்பட்டினத்தை மாற்றினார்.

1750களில் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கிருஷ்ணராஜா வின் படையில் ஓரு போர் வீரராக இருந்து தளபதியாக உயர்ந்தார் ஐதர்அலி. கிருஷ்ணராஜா தனது ஆட்சிக்கு கீழிருந்த திண்டுக்கல் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை ஐதர்அலிக்கு தந்தார். தானே அரசரானால் என்கிற சிந்தனை வர அதற்கு உதவியாக இருந்தது படை வீரர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை. இதை கிளறிவிட்ட ஐதர்அலி, படை வீரர்களை தனக்கு சாதகமாக்கி 1762 ல் அரசை கைப்பற்றி மன்னராக அமர்ந்தார். அவருக்கு பின் மைசூர் சமஸ்தானத்தை திப்புசுல்தான் ஆண்டார். உடையார் வம்சத்தினர் பிரிட்டிஸார் உதவியை பெற்று திப்புசுல்தான் மீது 1799ல் போர் தொடுத்து திப்புசுல்தானை போரில் தோற்கடித்து கொன்றனர். மீண்டும் மைசூர் உடையார்கள் கட்டுப்பாட்டுக்கள் வந்தது. உடையார்கள் பிரிட்டிஸார் கட்டுப்பாட்டுக்குள் சென்றனர். ஆண்டு தோறும் மைசூர் சமஸ்தானத்தின் சார்பில் கப்பம் கட்டப்பட்டது.

1947ல் இந்திய விடுதலைக்கு பின்னர் சமஸ்தானங்கள் எல்லாம் இந்தியரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. குறுநில மன்னர்கள், ஜமீன்தார்களுக்கு அரசு மானியம் வழங்கியது. ஆனாலும் அவர்களை மன்னர்களாக, ஜமீன்தார்களாக அங்கீகரித்து அவர்களுக்கான மரியாதையை செய்தது இந்தியரசு. 1950 வரை இது தொடர்ந்தது. மெட்ராஸ் ஸ்டேட்டுக்குள் அடங்கியிருந்த மைசூர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கர்நாடாகவுக்கு சென்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மன்னராக இருந்தவர் ஜெயச்சமராஜா. சமஸ்தானத்தை பெரிய அளவில் எந்த நிபந்தனையும் விதிக்காமல் இந்திய அரசோடு இணைத்ததுக்கு பிரிதிபலமான 1956 முதல் 1966 வரை மாநில கவர்னராக நியமித்தனர். 1974 செப்டம்பர் 24ந்தேதி மறைந்தார்.

இவர் மறைவுக்கு பின்பு, இவரது மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மன்னராக அறிவிக்கப்பட்டார். இது சட்டப்படியான பதவியல்ல. அங்கீகாரமற்ற சம்பிரதாயமான பதவி. அவர் மறைவுக்கு பின்பு, இப்போது, நான்காம் கிருஷ்ணன் உடையார் அந்த பதவியில் அமர்ந்துள்ளார்.

– ராஜ்ப்ரியன்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions