ஆடைக் கட்டுப்பாட்டால் ஆசிரியர் படிப்பை துறந்த பெண்

0
ஆடைக் கட்டுப்பாட்டால் ஆசிரியர் படிப்பை துறந்த பெண்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹஸ்னா. இவரது கணவர் ஹர்ஷத் மொகமது. ஆசிரியர் வேலை பார்ப்பதையே ஹஸ்னா தன் லட்சியமாக கொண்டார். அதற்காக பயிற்சி பெறுவதற்காக, கேரளா நடுவதுல் முஜாஹிதின் என்ற இஸ்லாமிய அமைப்பு நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றார்.

அங்கு அவருக்கு சோதனை வந்தது. அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற வருபவர்கள் பர்தா அணியக்கூடாது என்பது விதிமுறை. பயிற்சி
நிறுவனத்தின் இந்த விதிமுறைக்கு ஹஸ்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவரது கணவர் ஹர்ஷத் மொகமது கூறுகையில், “பயிற்சிக்கு வருபவர்கள் புடவை மட்டும் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், புடவையை விட பர்தா அணிந்து வருவது எனது மனைவிக்கு வசதியாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதிப்பதில்லை.

தங்களது விதியை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, தான் ஆசையாக நேசித்த ஆசிரியர் படிப்பையே வேண்டாம் என எனது மனைவி மறுத்துவிட்டார்’’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இவரை போல் ஒருவருக்காக விதிகளை தளர்த்த முடியாது. அப்படி தளர்த்தினால் இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் வந்தபடி இருக்கும்’’ என தெரிவித்தனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions