உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

0
உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பழங்களின் உதவியை நாடலாம்.

பழங்களில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச் சத்துகள் இருப்பதால் எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

‘டயட்’ என்கிற பெயரில் உடல்நலனைக் கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான முறையில், வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்கு பழங்கள் கைகொடுக்கும்.

அப்படிப்பட்ட சில பழங்களைப் பற்றிப் பார்ப்போம்…

வெண்ணெய்ப் பழம்: ‘அவகேடா’ எனப்படும் வெண்ணெய்ப் பழத்தில், ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும், அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் ஒலீயிக் ஆசிட்டும், தண்ணீரும் உள்ளன. இது டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த ஹார்மோன், கொழுப்பைக் குறைக்கும்.

தர்பூசணி: மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றுக்கு தர்பூசணி உதவுகிறது. ஏனெனில் இதில் தண்ணீரும், இயற்கை முறை யிலேயே குறைவான கலோரியும் உள்ளன. தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிக்கும், தசைகளில் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

பேரிக்காய்: பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சினைக்குத் தீர்வு தருகிறது. எந்த உணவு சாப்பிட்டாலும் சிரமமின்றிச் செரிமானம் ஆவதற்கு பேரிக்காய் உதவுகிறது.

பீச் பழம்: குடலைச் சுத்தப்படுத்தும் பணியைச் செய்யும் பீச் பழத்தில் உள்ள பினோலிக், வயிற்றில் சதைபோடுவதைத் தடுக்க உதவுகிறது.

ஸ்டிராபெர்ரி: ஸ்டிராபெர்ரி பழம் லெப்டின் மற்றும் அடிபோனெக்டின் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, கொழுப்பை எரிக்க உதவுகின்றன.

மேலும் இதில் உள்ள, வீக்கத்தைத் தடுக்கும் என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அவற்றைக் குணப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் கை கொடுக்கிறது.

எலுமிச்சம்பழம்: எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் ‘சி’, சிட்ரிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக் கிறது.

ஏப்ரிகாட்: இப்பழத்தில், கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

மாதுளம்பழம்: மாதுளையில் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், கெட்ட கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.

பிளாக்பெர்ரி பழம்: இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ‘சி’ உள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிடுவதால், சக்தி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானப் பிரச்சினைகளையும் தீர்க்கிறது.

ஆரஞ்சு: ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் ‘சி’ உள்ளது. மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதம், இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மேலும் ஆரஞ்சுப் பழத்தில், நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சத்துகள் உள்ளதால், சருமத்தை மென்மையாக்குவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions