உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம்

0
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் கான்சாகிப் வாய்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இயற்கை சாகுபடி மற்றும் நெல்திருவிழா, வேளாண் கண்காட்சி நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார், செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் துணைத்தலைவர் ராஜராமன்,செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவில்பட்டி மண்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் பூச்சி செல்வம், பூச்சிகளால் விளையும் நன்மையும் தீமையும் என்ற தலைப்பில் விரிவாக பேசினார். விவசாயத்தில் பனை மரத்தின் செயல்பாடுகள் குறித்து சுதேசி இயக்க தலைவர் குமரிநம்பி விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
கான்சாகிப் வாய்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.என்.சக்காப் விவசாயிகளிடம் பேசுகையில். மாடில்லா விவசாயம் மலட்டு என்பார்கள் அது போல தற்போது ஆடும், மாடும் குறைந்ததால் காடு கழனியெல்லாம் கறம்பாக உள்ளது. நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடிந்தவனும் நிமிர்தெழுவான் என்பது கிராம பழமொழி, மாடு செழித்தால் காடு செழிக்கும்,காடு செழித்தால் நாடு செழிக்கும் எனவே  ஒட்டுமொத்தமாக உழவன் தான் உலகின் அச்சானி என்று பேசியபோது அரங்கமே கைதட்டி வரவேற்றது.
இதனை தொடர்ந்து ராதாவாய்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகி, முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் கலைமணி, பொதுபணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ்,பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் விஜயராகவன் உள்ளிட்டவர்கள் இயற்கை வேளாண்மை குறித்து பேசினார்கள். கருத்தரங்கிற்கு சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்மை துறை மாணவர்கள், விவசாயிகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு அமைக்கப்பட்டு இருந்த வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு இயற்கை முறையில் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களின் விபரங்களை கேட்டறிந்து வாங்கி சென்றனர்.
சிதம்பரம் காளி
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions