இருட்டுன்னா உங்க குழந்தைக்கு பயமா? போக்குவது எப்படி…

0
இருட்டுன்னா உங்க குழந்தைக்கு பயமா? போக்குவது எப்படி...

 நாம் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் இருட்டைப் பார்த்தாலே பயப்படுவார்கள். அதுபோன்ற சமயங்களில் குழந்தைகள் பயப்படாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான விஷயங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?

குழந்தைகள் தூங்கும் படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் வரும் வகையிலான விளக்குகளைப் போடுங்கள். அப்போது குழந்தைகள் ஓரளவு பயமின்றி நிம்மதியாகத் தூங்குவார்கள்.

இருட்டாக இருக்கும்போது என்ன மாதிரியான எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதைக் குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த விஷயங்களைப் பற்றி விளக்கங்களைக் கொடுத்து தெளிவுபடுத்துங்கள்.

இருட்டில் இருக்கும்போதும் வெளிச்சமாக இருக்கும்போதும் வீட்டிலோ அல்லது அவர்களுடைய அறையிலோ எந்த மாற்றங்களும் நிகழாது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். அது அவர்களுடைய பயத்தைப் போக்கும்.

குழந்தைகள் இருக்கும் அறையில் முழுமையாக வெளிச்சம் இருக்கும்படி போடப்பட்டிருக்கும் விளக்குகளின் வெளிச்த்தின் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கலாம்.

ஒரு வாரம் முழுமையாக வெளிச்சம் தரும் விளக்கு இருந்தால் அடுத்த வாரம் அதைவிட கொஞ்சம் மங்கலாக இருக்கும் விளக்கும் என, வெளிச்சத்தைக் குறைத்துக்கொண்டே செல்லுங்கள். அப்போது இருட்டு என்பது ஒன்றும் பயம் கிடையாது என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே உணர்ந்து கொள்ள ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகள் அறையில் விளக்கை அணைத்துவிட்டு அவர்களுடன் எப்போதும் போல பேசிக்கொண்டு இருங்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய பயத்தை விலக்கும்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions