ஓடுகிறீர்களா…? ஒரு நிமிடம்

0

201707261142529277_German-man-swims-to-reach-work-rather-than-drive_SECVPFஅதிகாலையில் எழுந்து ஓடுவது பலருக்கும் பிடித்த உடற்பயிற்சி. உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் நடைபயிற்சியில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

ஓடுகிறீர்களா…? ஒரு நிமிடம் அதிகாலையில் எழுந்து ஓடுவது பலருக்கும் பிடித்த உடற்பயிற்சி. அது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. ஆனால் ஓடுவதில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

அவை…

* உடம்பில் வலியுடன் ஓடுவதைத் தவிர்க்க வேண்டும். காரணம் அந்த வலி, நம் உடலில் ஏதேனும் உள்காயம் ஏற்பட்ட அறி குறியாக இருக்கலாம்.

* ஓட்டத்துக்கு உரிய ஷூக்களை அணிந்து ஓட வேண்டும். சாதாரண காலணி அணிந்து கொண்டு ஓடக்கூடாது.

* ஷூவின் உழைப்பு, தரம் பார்த்து வாங்கு வதுடன், பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களாக வாங்க வேண்டும்.

* ஓட்டத்துக்கு இடையூறில்லாத, உடம்புடன் ஒட்டிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

* தொடர்ந்து முன் பக்கமாக குனிந்திருந்தால், முதுகு வலி பிரச்சினை ஏற்படும். எனவே அதனை தடுக்க, ஓடும்போது உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது மிகவும் அவசியமாகும்.

* ‘வார்ம் அப்’ எதுவும் செய்யாமல் நேரடியாக ஓடத் தொடங்குவது சரியல்ல. ஏனெனில் அதனால் தசைவலி, மூட்டுப் பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

* நாலு சுவருக்குள் டிரெட்மில்லில் ஓடுவதை விட, திறந்தவெளியில் ஓடுவது நலம் பயக்கும்.

* தினமும் ஓட்டம், மெல்லோட்டம் போன்ற எந்தப் பயிற்சியை செய்யத் தொடங்கினாலும், நம்மால் முடிந்த அளவுக்கு மிதமாக ஈடுபட வேண்டும்.

* ஓடும் தூரத்தையும் படிப்படியாக அதிகரிக்கலாம். மாறாக, ஆரம்பத்தில் அதிக தூரம் ஓடிவிட்டு, பின்னர் அதைக் குறைக்கக்கூடாது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions