அய்யம்பேட்டை தீ விபத்து 3 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் இயூமுஸ்லிம் லீக் அறிவிப்பு

0

1கடந்த மாதம் (ஜூலை 20) வியாழன் அன்று இரவு 11.30க்கு மேல் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை & சக்கராப்பள்ளி பகுதிக்கு உட்பட்ட முஹம்மதியா தெருவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 65 வீடுகள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் தலைமையில் மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் , இணைச் செயலாளர் ராஜாஜி காஸிம், பொருளாளர் ஜூல்பிகார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிம்லா நஜூப் உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் காலையில் பார்வையிட்டு அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி நகர இ.யூ.முஸ்லிம் லீக் சார்பிலான முதற்கட்ட உதவியாக ரூ.50,000 ஆயிரத்தை ஜமாஅத்தார்களிடம் வழங்கினர்.

இன்று ஆகஸ்டு 6 ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து பகுதிகளை பார்வையிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

3தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் இழந்த மக்களின் துயர் துடைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உதவியாக “பைத்துர் ரஹ்மா ” இறையருள் இல்ல திட்ட அடிப்படையில் 3 வீடுகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டிகொடுக்கும் என கட்சியின் தேசிய தலைவரும் சமுதாய தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் அய்யம்பேட்டை & சக்கராப்பள்ளி ஜமாஅத்தார்களிடம் தெரிவித்தார்.

மாநில செயலாளர்கள் காயல் மகபூப் , ஏ.எம்.ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில் எம்.எஸ்.எஃப் தேசிய இணைச் செயலாளர் அல் அமீன், சுதந்திர தொழிலாளர் யூனியன் பைசல் , மின்னணு ஊடகத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது சுல்தான், பஷீர் ரப்பானி, ராஜாஜி காஸிம், ஜூல்பிகார் அஹமது, சிம்லா நஜீப், முஹம்மது உசேன், நதீர் உள்ளிட்ட தஞ்சை வடக்கு மாவட்டத்தின் மாவட்ட , நகர , நிர்வாகிகள் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions