MSF ன்  பசுமை புரட்சி திட்டம் தேசிய தலைவர்ப ங்கேற்பு

0

1தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் என் அன்பிற்கினிய நண்பர் Mackie Faisal முயற்சியில் வழுத்தூர் லீக்கின் மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள் எம்.எஸ்.எஃப் தோழர்கள் ஒருங்கிணைப்பில் பசுமை புரட்சி திட்டம் அடிப்படையில் மரக்கன்று நடும் பணிகள் இரு மாதங்களாக தொடர்ந்து சிறப்பாக நடந்தேறி வருகிறது.

ஆகஸ்டு 6 அன்று வழுத்தூர் வருகை தந்த எங்களின் தேசிய தலைவர் Msf ன் இப்பணிகளை பெரிதும் பாராட்டி மரம் நடும் நிகழ்வில் பங்கேற்று மரக்கன்றையும் நட்டார்கள்.

தாய்ச்சபையின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில செயலாளர்கள் காயல் மஹபூப், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மரக்கன்றுகளை ஒவ்வொரு இடத்திலும் ஒருவரொருவராக நட்டு சிறப்பித்தனர்.

2குறிப்பு: கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த முறையில் பசுமை புரட்சி திட்டத்தை முன்னெடுத்ததை முன்மாதிரியாக கொண்டே முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவை தோழர்கள் வழுத்தூரில் புதியதொரு துவக்கத்தை தொடங்கியுள்ளனர்.இத்துவக்கம் தொடராய் இருந்து பசுமை நிழலை தரட்டும் என வாழ்த்துகிறேன்.

ஏ.எஸ்.முஹம்மது இஸ்மாயில்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions