நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்

0

கணினியில் வேலை செய்பவர்களுக்கு கண்களுக்கு ஓய்வு கிடைக்காது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

பால்மிங் (Palming) ஒரு நாற்காலியில் கையின் முட்டி தொடையில் படுமாறு உட்காரவும். வலது கையால் வலது கண்ணையும், இடது கையால் இடது கண்ணையும் மூடிக்கொண்டு, சந்தோஷம்தரும் பழைய தருணங்களை நினைத்துப்பார்க்கவும். 10 நிமிடங்கள் என தினமும் மூன்றுமுறை இந்தப் பயிற்சியை செய்யலாம்.

ஸ்விங்கிங் (Swinging) இரண்டு கால்களுக்கு இடையே சிறிதளவு இடைவெளி விட்டு நிற்கவேண்டும். பிறகு குதிகாலை லேசாகத் தூக்கி, கடிகாரத்தின் பெண்டுலம் போல வலப்பக்கமும் இடப்பக்கமும் தொடர்ந்து அசையவும். இடுப்பை வளைக்கக் கூடாது. அசையும் போது எதிர்ப்பக்கம் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை நன்றாகக் கவனிக்கவும். நீங்கள் அசையாமல் அந்தப் பொருள் அசைவது போல தோன்றும். பிறகு, கண்களை ரிலாக்ஸாக மூடிக்கொண்டு, மீண்டும் அசையவும். ஏற்கனவே பார்த்த அந்த பொருளை நினைத்துப் பார்க்கவும்.

கண்களை வட்டமாக சுழற்றுங்கள். பின்னர் மீண்டும் அதற்கு நேர்மாறான திசையில் வட்டமாகச் சுழற்றுங்கள். இந்தப் பயிற்சியை தினமும் நான்கு முறை செய்யுங்கள்.

நேராக நின்றுகொள்ளுங்கள். முகத்தைத் திருப்பாமல், இரு கண்களையும் முதலில் வலது புறமாகத் திருப்பவும். பிறகு இடதுபுறமாகத் திருப்பவும். இந்தப் பயிற்சியை ஆறு முறை செய்யவும்.

ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 20 25 தடவை கண் சிமிட்டவும். சீரான இடைவேளையில் கண் சிமிட்டினால் பார்வை தெளிவாகும். கண் அயர்வு நீங்கும்.

தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். கைகளில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, கண்ணிற்கு இரண்டு அங்குல தொலைவில் கைகளை வைத்து, தண்ணீரைத் தெளிக்கவும். தொடர்ந்து 20 முறை இவ்வாறு செய்யலாம்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions