சவூதியில் தொடங்கியது மாபெரும் பேரீத்தம் பழத் திருவிழா!

0

ஆண்டுதோறும் இதே காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய பேரீத்தம் பழத் திருவிழா, புரைதா அல்கஸீம் பகுதியில் 45 நாட்கள் நடைபெறும்.

இந்த கொண்டாட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது பலவிதமான பேரீத்தம் பழங்களை விற்பனைக்கு வைப்பார்கள். மிக குறைந்த விலையில் தரமான பேரீத்தம் பழங்கள் கிடைப்பதால் மக்களும் ஆர்வத்துடன் இவ்விழாவில் திரளாக கலந்து கொள்வர்.

சவூதியின் புரைதா மாகான பகுதியில் மட்டும் 7 மில்லியன் பேரீத்தம் மரங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான சவூதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் இது திகழ்கிறது.

மேலும் உலகின் அதிகமான பேரீத்தம் மரங்களை கொண்ட நாடு சவூதி என்பதும் உலக பேரீத்தம் பழ உற்பத்தியில் 25% சவூதி விளைச்சலாகும்.

இத்தகைய சிறப்புமிக்க இவ்விழாவை அல்கஸீம் ஆளுநர் சனிக்கிழமை புரைதாவில் தொடங்கிவைத்தார்.
(படம்:SPA.)

Image may contain: 2 people, people standing and wedding
Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions