நண்டு ஆம்லெட் செய்வது எப்படி

0

நண்டு ஆம்லெட் செய்வது எப்படி

  • தேவையான பொருட்கள் :

    நண்டு – 3
    இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் – ஒன்று
    சின்னவெங்காயம்  – 4
    மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
    சோம்புத்தூள் – கால் டீஸ்பூன்
    உப்பு – தேவைக்கேற்ப
    கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
    மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

    ஆம்லெட்க்கு:

    முட்டை – 4
    உப்பு – தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.

    செய்முறை :

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியாக தட்டி வைக்கவும்.
    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
    அடுத்து அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • நண்டு நன்றாக வெந்து தொக்கு பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  • நன்றாக வெந்ததும் நண்டில் இருந்து சதை பகுதியை எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  • அடுத்து அதில் நண்டு சதை, நண்டு வேக வைத்து மசாலா, தேவைப்பட்டால் உப்பு (நண்டு வேக வைக்கும் போதே உப்பு போட்டுதான் வேக வைத்திருக்கிறோம்) சிறிதளவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நண்டு, ஆம்லெட் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும்.
  • சூப்பரான நண்டு ஆம்லெட் ரெடி.
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions