டெல்டா மாவட்டத்தில் பலத்த மழை: 5 வீடுகள் இடிந்தது

0

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் இடையே மழை பெய்த வண்ணம் இருந்தது.இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதி அடைந்தாலும் மழை வரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை 6.15 மணிக்கு சிறிது சாரல் மழை பெய்து ஓய்ந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 9.30 மணி வரை நீடித்தது. இதனால் சாலை ஒரங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் நாகை மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள உப்பளத்தில் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவாரூர் மாட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக தஞ்சை டி.பி.எஸ் காலனி, புதிய பேருந்து நிலையம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 5 வீடுகள் இடிந்தன. ரெயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்ளில் தண்ணீர் பெருகி நின்றதால் ரெயில் சேவை பாதிக்கபட்டது. சீனிவாசபுரத்தில் மண் சுவர் இடிந்து விழுந்ததில் வீரய்யன் என்பவர் காயம் அடைந்தார். மேலும் பாரதி தாசன் நகர் பகுதியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 1 நாய், 1 ஆடு இறந்தது.

பெரிய கோவில் வளாகம் மற்றும் தஞ்சையில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நாஞ்சிக்கோட்டை, சூரக்கோட்டை பகுதிகளில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கலந்தது. மேலும் மின்சாரம் கம்பிகள் அறுந்து விழுந்து இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். ரோட்டில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

இருப்பினும் நேற்று பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions