2019 பார்லி., தேர்தலை சந்திக்க வியூகம்: சோனியா ஆலோசனை

0

2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலை சந்திக்க வியூகம் அமைக்கும் விதமாக நேற்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசனை நடத்தினார்.

இதில் மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாடி), மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் சதிஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), டி.ராஜா (இந்திய கம்யூ.,) சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்),

முஹம்மது பஷீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஜே.பி.யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்), திருச்சி சிவா (தி.மு.க.), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), தானிஷ் அலி (மதசார்பற்ற ஜனதாதளம்), அனில் அன்வர் அன்சாரி (போட்டி ஐக்கிய ஜனதாதளம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பா.ஜ., தோற்கடிக்கும் விதமாக வியூகம் வகுப்பதை உறுதி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல் வருகிற பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த துணைக் குழுக்களை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்


*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions