பிறந்த குழந்தையை கொரியரில் அனுப்பிய பெற்றோர்!

0

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள புஷோ நகரைச் சேர்ந்த தம்பதிக்கு, வீட்டிலேயே நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை விரும்பாத பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு, தொப்புள் கொடியைக் கூட அறுக்காமல் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து, கொரியர் நிறுவனத்திற்கு தகவல் கூறி, வீட்டிற்கு வரவழைத்து, பார்சலைப் பிரித்துப் பார்க்கக்கூடாது எனக் கட்டளையிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

வழியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்ட கொரியர் பையன் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளான். பிரித்து பார்த்ததும் குழந்தை இருந்துள்ளது. அதனை ஆசுவாசப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குழந்தையில்லை என ஏங்குவோர் பலர் இருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே என்ற பாடல் நினைவிற்கு வருது

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions