ஆதித்யாநாத் அரசு குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கு காட்டவில்லை! மம கட்சி கண்டனம்

0

2உ.பி.யில் 63 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆதித்யநாத் அரசின் குற்றவியல் ரீதியான அலட்சியப் போக்கே காரணமாக இருக்கின்றது!

பசுவை காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காட்டை கூட ஆதித்யாநாத் அரசு குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கு காட்டவில்லை!!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதியநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக ஆக்ஸிஜின் எனும் பிராண வாயு பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சுமார் 63 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்திற்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததால் குறிப்பிட்ட நிறுவனம் பிராண வாயு விநியோகம் செய்யாததால் குழந்தைகள் பலியாகி உள்னன.

3ஆதித்யநாத் தலைமையில் ஆளும் பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆதித்யநாத் அரசின் குற்றவியல் ரீதியான அலட்சியப் போக்கே காரணமாக இருக்கின்றது. பசுவை காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காட்டை கூட ஆதித்யாநாத் அரசு குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கு காட்டவில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மனிதஉயிர்களை மதிக்காத ஆதித்யநாத் அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சமீபத்தில் தனது 100 நாள் ஆட்சிக்கான மலரை வெளியிட்ட உ.பி. முதல்வர் ஆதித்யநாத், உ.பி. மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வேன் என்று சூளுரைத்தார். உ.பி. அரசு அதிகாரிகள் தவறாமல் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் உத்திரவிட்ட முதல்வர் ஆதித்யநாத், மருத்துவமனைக்கு பிராண வாயு விநியோகம் செய்த நிறுவனத்திற்கு ரூ.69 லட்சத்தை வழங்காமல் இருந்த காரணத்தால் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் மரணித்த பின்பு நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் தர முன்வரும் ஆதித்யநாத் அரசு, ரூ.69 லட்சத்தை நிலுவை வைத்தது ஏன்?

வளர்ச்சி என்ற வெற்று முழக்கத்தோடு மோடி பாணியில் ஆட்சி செய்யும் ஆதித்யநாத் இதுபோன்ற சோக சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், நிவாரணமாக ரூ.50 லட்சமும் உடனே வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*