கண்டியூரில் இறையருள் இல்ல கட்டுமான பணி

0

1fகண்டியூர் தீ விபத்தில் பல வீடுகள் சேதமடைந்ததையெடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 5 வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்ல திட்டத்தின் கீழ் தற்பொழுது கட்டப்பட்டு வரும் இறையருள் இல்லங்களின் கட்டுமான பணிகளில் ஒன்றான கான்கிரீட் பணிகள் இன்று நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்…..

இந்த இறைஇல்ல கட்டுமான பணிகளை சிறப்பான முறையில் விரைவாக செய்து கொடுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர்  ஜுல்பிஹார் அவர்களுக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளை வழங்குவானாக….

அவரது கட்டுமான நிறுவனம் Green Construction சிறப்புடன் திகழ அல்லாஹ் துணை நிற்பானாக!!

இந்நிகழ்வில் தாய்ச்சபை நிர்வாகிகள்,கண்டியூர் ஜமாஅத் சபை நிர்வாகிகள்,ஜமாஅத்தார்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1C 1D 1E 1f 1g

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*