பா.ஜ.க. ஆட்சியில் தாக்குதல்கள் அதிகம்!’ : அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை!

0

‘சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் பா.ஜ.க ஆட்சியில்தான் அதிக அளவில் நடந்துள்ளது’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

டில்லர்சன்

சர்வதேச மத சுதந்திரம்குறித்து அமெரிக்கா உலகளாவிய ஆய்வு ஒன்றை நடத்தியது. 2016-ம்ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் மதரீதியிலான தாக்குதல்கள் அதிக அளவில் தொடர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்தாக்கல்செய்தார். இது குறித்து ரெக்ஸ் டில்லர்சன் கூறும்போது, ‘இந்தியாவில் மதரீதியிலான தாக்குதல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக கிறிஸ்தவர், முஸ்லிம் போன்ற சிறுபான்மை மக்கள்மீது தொடர் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. வழிபாட்டுத் தலங்களும் அது தொடர்பான சொத்துகள் மீதும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற மதரீதியான தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசு தடுக்கத் தவறியுள்ளது. கடந்த ஆண்டுதான் இந்தத் தாக்குதல்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன’ என்று கூறினார்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions