தஞ்சாவூரில் கத்தியைக் காட்டி மிரட்டி நகைக பறிப்பு..

0

தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாதாகோட்டை அறிஞர் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி அருணா (33), சமூக நலத் துறை ஊழியர். இவர் புதன்கிழமை மாலை பணி முடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆர்.ஆர். நகரில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவரை மறித்து நகைகளைக் கழற்றி தருமாறு கத்தியைக் காட்டி மிரட்டினர்.
இதனால், அச்சமடைந்த அருணா, தான் அணிந்திருந்த மொத்தம் 4 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரத்தைத் கழற்றிக் கொடுக்க, அவற்றை வாங்கிக் கொண்ட மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions