துபையில் தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம்

0

1Eஅல்லாஹ்வின் கிருபையால் துபையில் 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 18ம் தேதி *தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற்றது

*தமுமுக துபை மண்டலம் சார்பாக துபை லத்திஃபா மருத்துவமனையில் 18-08-2017. வெள்ளியன்று மாபெரும் இரத்ததானம் முகாம்* மண்டல தமுமுக தலைவர் அதிரை சாகுல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முகாமில் துபையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்
*தமுமுக* சோனாபூர் கிளையில் பல்தியாகேம்ப், MLSS கேம்ப் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிளையின் மூலமாக தமிழ் சகோதரர்கள், எகிப்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை சார்ந்த சகோதரர்களும் பங்கு பெற்றனர்.

கிளையின் மூலமாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல துணைதலைவர் முகவை அப்துர்ரஹ்மான், கிளை துணை தலைவர் கடையநல்லூர் பாதுஷா, கிளை தலைவர் கடையநல்லூர் முஹம்மது, கிளை பொருளாளர் ராஜகம்பீரம் நைனார் ஆகியோர் செய்திருந்தனர்
இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த அனைத்து சகோதரர்களுக்கும், நிகழ்ச்சியை எற்பாடு செய்த மண்டல நிர்வாகிகள், அமீரக நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் அல்லாஹ் மறுமையில் முழுமையாக நன்மைகள் வழங்க பிரார்த்திப்போம்.

அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே)

என்றும் சமுதாய பணியில் (தமுமுக சோனாபூர் கிளை துபைமண்டலம்)

தகவல்

கடையநல்லூர் பாதுஷா கிளை துணை தலைவர்)

1C 1D

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions