டாக்டர் கஃபில் மீது எந்தத் தவறும் இல்லை…!!! -மாஜிஸ்திரேட்டு அறிக்கை

0

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாகச் சொந்தப் பணத்திலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்துப் பல குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியவர் டாக்டர் கஃபில் கான்.

ஆனால் உ.பி. மாநில அரசு, “டாக்டர் கஃபில் கான் பொறுப்பற்றுச் செயல்பட்டார்” என்று குற்றம் சுமத்தி, குழந்தை நல மருத்துவப் பிரிவிலிருந்து அவரை நீக்கியது.
இப்போது கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் , அதிகாரபூர்வமாக நடத்திய விசாரணை அறிக்கை மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், டாக்டர் கஃபில் மீது ஒரு சிறு விமர்சனம்கூட இல்லை. தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார் யார் என்று அந்த அறிக்கை இட்டுள்ள பட்டியலில் டாக்டர் கஃபில் கானின் பெயர் இல்லை.
மாறாக, “100 படுக்கைகள் உள்ள வார்டில் குளிர்சாதனக் கருவி சரியாகச் செயல்படவில்லை, உடனே நடவடிக்கை எடுங்கள் என்று டாக்டர் கஃபில் உரிய நேரத்தில் கடிதம் எழுதியும் மருத்துவனை நிர்வாகம் அலட்சியமாய் இருந்தது” என்று மாஜிஸ்திரேட் அறிக்கை டாக்டர் கஃபிலின் கடமை உணர்ச்சியைப் பாராட்டியுள்ளது.

மேலும் அவரை நீக்கிய பின்பும் அடுத்தடுத்த நாட்கள் 30,8 என குழந்தைகள் இறந்தது அவர் மீது குற்றம் இல்லை என்பதை உறுதி படுத்துகிறது என மாஜிஸ்திரேட்டு அறிக்கை கூறியுள்ளது.

இனியாவது உபி மாநில அரசு, டாக்டர் கஃபில் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற்று, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவரிடமிருந்து பறித்த குழந்தை நல மருத்துவ பிரிவு தலைமை பதவியையும் திரும்ப தந்தால்தான் உபி அரசு செய்த தவறுக்கு பரிகாரமாகவும் இருக்கும்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions