அஜ்மானில் அமீரக தமிழர்கள் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா

0

அஜ்மானில் அமீரக தமிழர்கள் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா ; காயிதே மில்லத் பேரவையினர் பங்கேற்பு.

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் அமீரக தமிழர்கள் அமைப்பு சார்பில் 71ஆவது இந்திய சுதந்திர தின விழா , தொழில் அதிபர்கள் சாரதி , பாரதி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும்
தியாகத் திருநாளை வரவேற்கும் நிகழ்வு என முப்பெரும் விழாவாக 18-08-2017 அன்று நடைப்பெற்றது.

அமீகர தமிழர்கள் அமைப்பின் செயலாளர் சபையர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

தமிழர் அமைப்பின் தலைவர் டாக்டர் ஏ.எஸ்.மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக அஜ்மான் போலீஸ் துறையின் டைரக்டர் ஜெனரல் அப்துல்லா ஷேக் ராசீத் மத்ரூசி கலந்துக்கொண்டு நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த இரட்டை சகோதரர்களான சாரதி மற்றும் பாரதி ஆகியோரின் “முந்திரி பருப்பு விளைச்சல் முதல் அதனை பேக்கிங் செய்வதுள்ள வரையுள்ள கருவியை கண்டுபிடித்தமைக்கு பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அமீரக காயிதே மில்லத் பேரவை துணை பொதுச்செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி , எஸ்.எஸ்.மீரான் , நந்தகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

முப்பெரும் விழாவில் பங்கேற்ற அமீரக காயிதே மில்லத்
பேரவை நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.

முப்பெரும் விழாவில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் அஜ்மான் மண்டல செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஷார்ஜா மண்டல செயலாளர் தஞ்சை பாட்ஷா கனி, வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆடிட்டர் அப்துல் ரஜாக், மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் காரைக்கால் ஃபைஜுர் அலி, தேரா பகுதி செயலாளர் அய்யம்பேட்டை அமானுல்லா, கராமா பகுதி செயலாளர் அய்யம்பேட்டை இபுறாஹிம் அஹமது தர்வேஷ் மற்றும் கடையநல்லூர் முஸ்தாக், கோபு , காயல் காதர் சுலைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions