கத்தார் ஹஜ் பயணிகளுக்காக எல்லையை திறந்து விட சவூதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவு…..!!

0

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் கத்தாரிலிருந்து ஹஜ் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்காக எல்லையை திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் கத்தார் மீது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி கத்தாருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டன.

இந்நிலையில் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையை நிறைவு செய்ய உலகம் முழுவதிலிருந்தும் லட்சோபலட்ச ஹஜ் பயணிகள் மக்கா மாநகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

கத்தாரிலிருந்தும் ஹஜ் பயணிகள் வருவதற்காக சவூதி அரேபியாவின் எல்லையை திறக்க சவூதி மன்னர் சல்மான் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் எல்லை திறக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக ஆயிரம் தடைகள் இருந்தாலும் அல்லாஹ்வுடைய கடமையை செய்பவரை தடுக்க உலகில் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இந்த நிகழ்வு தெளிவாக காட்டுகிறது.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! (திருக்குர்ஆன் 3:103)

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions