புதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருகை !

0

ஹஜ் வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் உலகெங்கிருந்தும் வரும் சுமார் 264,0000 ஹஜ் பயணிகள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவுள்ளனர் என்று சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 13,25,375 ஹஜ் யாத்ரீகர்கள் மட்டுமே வந்த நிலையில் இந்த வருடம் சுமார் 1.6 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் கூடுதலாக வருகை தரவுள்ளனர். புனித கஃபாவைச் சுற்றி மடஃப் எனும் தவாப் வலம் வரும் பாதைகள் அமைக்கப்பட்டு வந்ததால் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 20 சதவிகித கோட்டா குறைக்கப்பட்டிருந்தது மீண்டும் இந்த வருடம் அதிகரிக்கப்பட்டதே பயணிகள் அதிகரிப்பின் பின்னனி.

இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் பல்வேறு முனையங்களின் வழியாகவும் சவுதிக்குள் வருகை தந்து விட்டனர். அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் இலகுவாக ஹஜ் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions