கண்டியூர் அருகே முன்விரோத தகராறில் கத்தியால் குத்திய கணவன்-மனைவி கைது

0

திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே வீரசிங்கம்பேட்டை இளமாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பெருமாள் மகன் ரெங்கநாதன் (48). அதே தெருவில் வசிப்பவர் ராஜகோபால் மகன் ஜெயபால்(32). விவசாய கூலி வேலை செய்பவர்கள். இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்துவந்தது.

சம்பவத்தன்று ஜெயபால் அவரது மனைவி கீதாவும் ரெங்கநாதனை திட்டி அடித்துள்ளார்கள். மேலும் ஜெயபால் ரெங்கநாதனின் முகத்தில் கத்தியால் குத்தி கிழித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரெங்கநாதன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ரெங்கநாதன் மனைவி கமலா(30) கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கனகதாசன் வழக்குப்பதிவு செய்து ஜெயபால் மற்றும் கீதா ஆகியோரை கைது செய்தார்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions