கண்டியூர் இறையருள் இல்ல கட்டுமான பணி

0

2கண்டியூர் தீ விபத்தில் பல வீடுகள் சேதமடைந்ததையெடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 5 வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்ல திட்டத்தின் கீழ் தற்பொழுது கட்டப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த வீடுகளுக்கு கதவு_நிலைகள் வைக்கும் பணி முடிவடைந்தது…

அல்ஹம்துலில்லாஹ்…..

இந்நிகழ்வில் தாய்ச்சபை நிர்வாகிகள்,கண்டியூர் ஜமாஅத் சபை நிர்வாகிகள்,ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்ஷா அல்லாஹ் இறையருள் இல்லங்களில் நான்கு வீடுகளின் பணிகள் முடிவடையும் நிலையில்
வருகின்ற இந்த மாதம்  செப்டம்பர் 23 (23/9/17) அன்று பேராசிரியர் ருந்தகை முனீருல்மில்லத் K.M.காதர் மொய்தீன் M.A.,EX.mp., அவர்கள் கரங்களால் பயனாளிகளுக்கு அர்பணிப்பு செய்ய உள்ளது…..

இந்நிகழ்வில் தாய்ச்சபை தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்…

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions