அல் அய்னில் 15 திர்ஹம் செலுத்தினால் நாள் முழுவதும் பார்க்கிங் !

0

அல் அய்னில் 15 திர்ஹம் செலுத்தினால் நாள் முழுவதும் பார்க்கிங் செய்யும் வசதி அறிமுகம்.

அபுதாபிக்கு உட்பட்ட அல் அய்ன் நகரில் புதிதாக 121 பார்க்கிங் டிக்கெட் வழங்கும் மெஷின்களும், சுமார் 5,600 மேற்பட்ட பார்க்கிங் ஸ்லாட்களும் நகரை 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.

ஹை கிஸைதா மண்டலத்தில் 1,376, ஹை அல் ருபைனா மண்டலத்தில் 1,175, ஹை அல் நவாஸி மண்டலத்தில் 1,107, ஹை அல் ஹூமைரா மண்டலத்தில் 1,166, ஹை அல் ஸலாமா 867 என மொத்தம் 5,696 பார்க்கிங் ஸ்லாட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பிரதி சனிக்கிழமை முதல் வியாழன் வரை தினமும் காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை மணிக்கு 2 திர்ஹம் என ஸ்டான்டர்டு ஸ்லாட்டுகளுக்கான பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது நாள் முழுவதும் பார்க்கிங் ஸ்லாட்டை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 15 திர்ஹத்தை மட்டும் செலுத்தலாம் அல்லது பரிமியம் பார்க்கிங் ஸ்லாட்டுகளில் அதிகபட்சம் 4 மணிநேரம் வரை வாகனத்தை நிறுத்தி விட்டு மணிக்கு 3 திர்ஹம் செலுத்தும் வசதியும் உள்ளது.

வீட்டருகேயுள்ள ஸ்டான்டர்டு பார்க்கிங் ஸ்லாட்டுகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ரெஸிடென்ட் விசாவில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேவேளை ரெஸிடென்ட் விசாவில் இல்லாதவர்கள் இரவு 9 முதல் காலை 8 மணிவரை இந்த பார்க்கிங்குகளில் வாகனத்தை நிறுத்த அனுமதியில்லை.

கட்டிட உரிமையாளர்கள் அல்லது தங்கியிருப்போர் அல்லது அவர்களது நெருங்க இரத்த உறவுகள் என கட்டிடத்திற்கு தலா 2 பார்க்கிங் சலுகை கட்டண அடிப்படையில் பெறலாம். முதலாவது பார்க்கிங் ஸ்லாட் 800 திர்ஹத்திற்கும், 2 பார்க்கிங் ஸ்லாட் 1,200 திர்ஹத்திற்கும் கிடைக்கும்.

வில்லாக்களில் வாழும் இமராத் குடும்பத்தினர்களுக்கு பார்க்கிங் ஸ்லாட்டுகள் இலவசம். அதேவேளை அப்பார்ட்மென்ட்டுகளில் வாழும் இமராத்திகள் 4 பார்க்கிங் ஸ்லாட்டுகளை வரை இலசவமாக பெற்றுக் கொள்ளலாம்.

Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions