தஞ்சையில் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

0

தஞ்சை பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இந்திராநகரை சேர்ந்தவர் ஜோசப் தமிழ்வாணன்(வயது39). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அனுசியாமேரி. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்து வருகிறார். இவர்கள் மாடி வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 6-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவைக்கு சென்றனர்.அங்கிருந்து புறப்பட்டு நேற்றுகாலை தஞ்சைக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோ அருகில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். ஜோசப்தமிழ்வாணனின் தந்தை ஆரோக்கியசாமி ஓய்வு பெற்ற போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions