கண்டியூரில் இல்லத்தை திறந்து இதயத்தை குளிரச் செய்த தேசிய தலைவர்

0

1தஞ்சை மாவட்டம் – கண்டியூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களில் 4 குடும்பத்திற்கான வீடுகளை கட்டித்தர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றிருந்தது.

அல்லாஹ்வின் உதவி கொண்டு 4 வீடுகள் பைத்துர் ரஹ்மா இறையருல் இல்ல திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டது. அவ்வீடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் வாழும் காயிதே மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

சமுதாய புரவலர்கள் ஆலியா ஷேக் தாவூத் மரைக்காயர் , புருனை ஜபருல்லா , அமீரக காயிதே மில்லத் துணை பொதுச் செயலாளர் பரகத் அலி ஆகியோரும் தலைவர் வேண்டுகோளை ஏற்று தலா ஒரு வீட்டை திறந்து வைத்தனர்.

வீடுகளை இழந்த குடும்ப கண்ணீரை போக்கி இதயத்தை குளிரச் செய்து அரவணைத்த தாய்ச்சபை தலைவர்களையும் , உதவிகரம் நீட்டிய உள்ளங்களையும் அக்குடும்பங்கள் எண்ணி துஆ செய்கின்றனர்.

1 2 3 4 5 6

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions