தஞ்சை மேரீஸ் கார்னரில் மேம்பாலம் பற்றிய ஒரு ரிப்போர்ட்..

0

தஞ்சை வாசிகள் கண்டிப்பாகப் படிக்கவும்..! பகிரவும்…!!

ஏனெனில், இது தஞ்சை மக்களின் உயிர்ப் பிரச்சினை:

தஞ்சை மக்கள் அனைவரும், தற்போது மேரீஸ்கார்னர்- சாந்தப்பிள்ளை ரயில்வே கேட்- வண்டிக்காரத்தெரு- இவற்றை இணைத்து ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருவதை, நாம் அறிவோம். சரி..! அது நல்ல விஷயம்தானே..! அதில் என்ன உயிர்ப் பிரச்சினை..!! என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஆனால், அவ்வழியாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்கு மட்டுமே, அது என்ன “ உயிர்ப் பிரச்சினை” என்பது புரியும். ஆமாம்..! அந்த மேம்பாலத்தின் ப்ளான் மற்றும் அமைப்பு, சில இடங்களில் குளறுபடியாகவும், உயிர்க்கொல்லியாகவும், அமைந்து உள்ளது. குறிப்பாக, இரண்டு இடங்கள்.

(1) அந்த மேம்பாலம், மேரீஸ் கார்னரில், சரியாக, நாஞ்சிக்கோட்டை சாலை சந்திக்கும் பாயிண்டில், அந்த கட் ரோட்டை முழுதும், குறுக்காக அடைக்கும் விதத்தில், கான்வாண்டை (CONVENT) ஒட்டி சட்டென இறங்கி முடிந்து விடுகிறது. மேம்பாலம் புழக்கத்துக்கு வந்த பின்னர், நாஞ்சிக்கோட்டை சாலையிலிருந்து மேரீஸ் கார்னருக்குள் நுழையும் வாகனங்கள், மேம்பாலத்தைத் கிராஸ் செய்து எந்த வழியில் நகருக்குள் நுழைவது, என்பது தெளிவில்லாமல் உள்ளது.

நாஞ்சிக்கோட்டை சாலையிலிருந்து மேரீஸ் கார்னருக்குள் நுழையும் வாகனம், ஒன்று வலது பக்கம் சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் இருக்கும் திசைப் பக்கமாகச் செல்ல வேண்டும்.ஆனால், அவ்வழியாகச் செல்வது இயலாது. ஏனெனில், அது சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் பக்கமிருந்து வரும் வாகனங்கள் மட்டுமே வரக்கூடிய ’ஒன்வே’ ஆக உள்ளது.

மற்றொன்று, CONVENT- ஒட்டியவாறு மேம்பாலம் முடியும் இடத்தில், மெயின் ரோட்டை கிராஸ் செய்து மேரீஸ்கார்னருக்குள் நுழைய முயன்றால், மேம்பாலத்திலிருந்து, மிக வேகமாக திருச்சி ச்சலைக்குள், கான்வெண்டை ஒட்டியாவாறு இறங்கும் வாகனத்தில் கண்டிப்பாக அடிபடும். 60% சதவிகிதப் மேம்பாலப் பணி முடிவடைந்த நிலையில், இனிமேல் இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், கான்வெண்டை நோக்கி வரும் , அருள் தியேட்டருக்கு முன்பாகவே, சர்ச் அருகில், நாஞ்சிக்கோட்டை ரோட்டை, நிரந்தரமாக அடைத்துவிட வேண்டும். இது சாத்தியமா?

(2) அடுத்து, வண்டிக்காரத்தெரு அருகில், வெட்டுக்காரத் தெருவையும், மானம்புச்சாவடி செல்லும் வி.பி.கோவில் தெருவையும் இணைக்கும் வகையில், அந்த மேம்பாலத்தின் அடியில், குகை போன்ற வடிவத்தில், ஒரு குருகலான சந்து ஏற்படுத்தியுள்ளார்கள். TRANSPORTER’S VIEW POINT இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள, இந்த சந்து வழியாக, அனுபவம் இல்லாத சிறுவர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் எவரேனும் கடக்கும் பட்சத்தில், கண்டிப்பாக, செர்வீஸ் சாலையில் வேகமாக வரும் வாகனத்தில் அடிபடுவார்கள். இதை எப்படி மாற்றி அமைப்பது. சுமார் 60% சதவிகிதப் பணி நிறைவடைந்த நிலையில் கண்ணுக்குத் தெரிந்த இந்த உயிர்க்கொல்லி- குறைபாடுகளை எப்படி சரி செய்வது.

சாதாரண மக்களாகிய நம் கண்களுக்குத்தெரிந்த, இந்த உயிர்கொல்லி குறைபாடுகள், சம்பந்தப்பட்ட, உயர் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையின் உயர் பொறியாளர்களின் கண்களுக்கு எப்படித் தெரியாமல் போனது? இப்பதிவைப் பார்க்கும் தஞ்சை வாசிகள் கண்டிப்பாக, சிந்திக்க வேண்டும்..! வீறு கொள்ள வேண்டும்..! இதை தஞ்சை மக்கள் ஒவ்வொருவரும் பகிரவும். அப்படியாவது, இது சம்பந்தப் பட்ட துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்குச் செல்கிறதா? என்று பார்ப்போம். ஒன்று படுவோம்..! நம் தஞ்சை மக்களின் உயிர் காப்போம்..!!

Er ஆறுமுகம் கணேசன்

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions