மீனவன்

0

ஒரு தீவுல ஒரு மீனவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான் …தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதியதுக்குள்ளாகவே தேவையான அளவு மீன்களை பிடித்து வந்து அருகில் உள்ள கிராமங்களில் விற்று விட்டு போதிய பொருள்களுடன் வீடு திரும்புவான் ..
மதியத்துக்கு மேல் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக மீத பொழுதை கழிப்பான் …

ஒரு தினம் அந்த தீவை சுற்றி பார்க்க விரும்பிய அருகாமையிலுள்ள நகரத்தை சேர்த்த பயணி ஒருவர் அவனின் படகிலேறி தீவுகளை பார்த்தவர் அவனிடம் …
அவனின் வாழ்க்கை பற்றி விசாரித்தார் ..மீனவனும்
அன்றாடம் தன் வாழக்கையை விவரித்தான் …
அப்போது ….

பயணி : தினமும் மதியத்துக்குள்ளாகவே திரும்புகிராயே …இன்னும் சற்று நேரம கூடுதலாக
மீன் பிடித்தால் அதிக வருவாய் கிடைக்கும்மே ..!
மீனவன் : அதிக பணத்தை வைத்து என்ன செய்ய போகிறேன் .?
பயணி : அதிக பணத்தில் இன்னொரு படகு வாங்கலாம்
அதை பயன்படுத்தி நிறைய மீன் பிடிக்கலாம் .
மீனவன் : மீன் பிடித்து ..?
பயணி : அவற்றை மிகுந்த பொருளுக்கு விற்றால்
பெரிய மீன்பிடி கப்பல் வாங்கும் அளவுக்கு பணம் கிடைக்கும் ..
மீனவன் : சரி அப்புறம் ….
பயணி : நீயே பெரிய மீன் சந்தையை உருவாக்கி
மீனகளை மொத்தமாக விற்று பெரும் பணம் சம்பாதிக்கலாம் …
மீனவன் :சரி பிறகு ..
பயணி : பிறகு என்ன அந்த பெரும் பணத்தை கொண்டு
மனைவி குழந்தைகளை சந்தோசமாக வைத்திருக்கலாம்…நீயும் மகிழ்ந்திருக்கலாம் …

அப்போது மீனவன் சொன்னான் ..” அப்படிதானே இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ”
(பயணிக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை )

தேவைக்கு மேல் பொருள் சேர்ப்பது கூட
அடுத்தவர்க்கு போய் சேரவேண்டிய பொருளை
திருடி வைத்துக் கொள்வதற்கு சமமே ..?!?!

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions