இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை

0

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மீண்டும் நடக்கிறது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், டிடிவி தினகரன் அணியும் உரிமை கோரி வருகின்றன. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி நடந்த விசாரணையின்போது, முதல்வர் பழனிசாமி தரப்பினர் அளித்த பிரமாணப் பத்திரங்களில் போலி கையொப்பம் இருப்பதாகவும் இதுதொடர்பான சாட்சியங்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பு கோரியது. இதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரியது. இதற்கு பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பில் வி.மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இந்த விசாரணையின்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தரப்பு வாதங்களையும் தேர்தல் ஆணையம் கேட்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions