கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை

0

உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ளது பிக்வடா கிராமம். இந்த கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை இல்லை. பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் கவுரவத்தை நிலைநாட்ட, கழிவறை இல்லாத வீடுகளில் உள்ள ஆண்களுக்கு தங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க கூடாது என்று பெற்றோருக்கு பிக்வடா கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிக்வடா கிராம பஞ்சாயத்துத் தலைவர் அர்விந்த் கூறும்போது, ‘‘இயற்கை உபாதைகளுக்கு கிராமத்தில் திறந்தவெளியை பெண்கள் பயன்படுத்துவது அவர்களது கவுரவத்துக்கு எதிரானது. வீட்டில் கழிவறை கட்டுவதற்கு பணம் இல்லை என்றால், அரசு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று கழிவறை கட்டலாம். இதுகுறித்து பஞ்சாயத்தில் ஒருமனதாக நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அதை மீறி யாராவது நடந்து கொண்டால், கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்’’ என்றார். – பிடிஐ

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*